தமிழர் நாகரிகம் இன்று இருப்பதைவிட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகவும், பல்வேறு மொழி பேசும் மக்களின் நாகரீகங்களோடு ஒட்டி உறவாடி அம்மக்களிடமிருந்து கலை, கலாசாரம், அறிவியல் போன்ற பல துறைகளிலும் பலவற்றையும் பெற்றுக்கொண்டு ஒரு உன்னத நிலையில் இருந்து வந்திருப்பதை பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும் இன்று எம்மிடையே பலரும் "நாம் அறிவியலில் போதிய வளர்ச்சி அடையவில்லை" என்று கூறிக்கொள்வதைக் கேட்கின்றோம். இக்கூற்றின் உண்மைத்தன்மை எத்தனை சதவீதம்? நாம் அறிவியலில் வளர்ச்சியடையவில்லையா? அல்லது வளர்ச்சி நிலையிலிருந்து தேய்வுப்பாதைக்குச் சென்றிருக்கின்றோமா?
ஒரு நீண்ட பாதையிலே பயணம் செய்துவரும் நாம் எமது பயணப் பாதையின் முன்னேற்றம் என்ன என்பதை அளவிட கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதும் அவசியமாகின்றது. அதுபோன்றே எமது அறிவியல் முன்னேற்றம் பற்றி கருத்துரைக்கும் நாம் பழங்காலததைய எமது அறிவியல் வளர்ச்சி நிலை பற்றி ஆராய்ந்து கருத்துரைத்தலே நலம் பயக்கும்.
ஒரு ஆய்வில் மொழியும் பிரதான பங்கு வகிக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்தவகையில் எம்மிடையே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள எமது மொழி மற்றும் அயல்மொழி அறிவியல் சொற்களின் செறிவு மற்றும் பயன்பாடு என்பன எந்தளவிற்கு இருந்துள்ளன என்பதை ஆராய்வதனுடாக எமது அறிவியல் வளர்ச்சி என்ன என்பது பற்றி சிந்திக்கலாம்.
அந்தவகையில் எம்மவர் அறிவியல் என்று கூறத்தக்கதும தற்காலத்தில் நாம் "சுதேச மருத்துவம் " என்று அடையாளப்படுதுகின்றதுமான "நாட்டு வைத்தியத்திலே " (இங்கு நாட்டு வைத்தியம் =சித்த வைத்தியம் +ஆயுர்வேதம் ) பயன்படுத்தப்பட்டுள்ள , பயன்படுத்தப் பட்டு வருகின்ற அளவைச் சொற்களை மட்டும் இங்கே பதச் சோறாக எடுத்துக்காட்டப் படுகின்றது. ஏனையவற்றை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம். அளவைச் சொற்களுக்கு பொருள்விளக்கம் கருதி இயலுமானவரை சர்வதேச அலகில் சமப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. எம்மவர் அறிவியல் வளர்ச்சி என்ன ? நீங்களே அளவிடுங்கள்!
நிறுத்தலளவை தொடர்பானவை.
அஞ்சலி: சர்வதேச அலகில் 240 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
அர்த்தசராவ: சர்வதேச அலகில் 240கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
அர்த்தபலம்: சர்வதேச அலகில் 30 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
ஆடகம்: சர்வதேச அலகில் 3840 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
இடப்பு: சர்வதேச அலகில் 16 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
இறாத்தல்: சர்வதேச அலகில் 480 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
உளுந்து சர்வதேச அலகில் 65 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
எருஎடை: சர்வதேச அலகில் 60 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
யவம்: சர்வதேச அலகில் 32.5 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கஃசு: சர்வதேச அலகில் 15 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கடைப்படி: 16 பலம் கொண்ட ஓர் அளவை அலகு.
கர்ஷ: சர்வதேச அலகில் 16 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கைசா: சர்வதேச அலகில் 15 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கழஞ்சு : சர்வதேச அலகில் 5200 மில்லி கிராமுக்கு(5.2 கிராம்) சமனான ஓர் அளவை அலகு.
காசெடை: சர்வதேச அலகில் 240 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கிரேயின்: சர்வதேச அலகில் 65 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
குஞ்சா: சர்வதேச அலகில் 125 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
குடுப்பம்: சர்வதேச அலகில் 120 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
குன்றி: சர்வதேச அலகில் 130 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
கோல: சர்வதேச அலகில் 8 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
சதுர்ப்பலம்: சர்வதேச அலகில் 240 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
சராவ : சர்வதேச அலகில் 480 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
சாதுரியபலம்: சர்வதேச அலகில் 240 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
சாணம்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
சூர்ப: சர்வதேச அலகில் 30720 (30 கிலோ 720 கிராம்) கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
துரோணம்: சர்வதேச அலகில் 15360 (15 கிலோ 360 கிராம்)கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
துரோணி: சர்வதேச அலகில் 61440 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
துட்டெடை: சர்வதேச அலகில் 488 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
துலை: சர்வதேச அலகில் 6 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
தூணி: 4 மரக்கால்(96 சுண்டு).
தூக்கு: சர்வதேச அலகில் 3 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
தொக்கு: சர்வதேச அலகில் 3 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
தொடி: சர்வதேச அலகில் 60 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
தோலா: சர்வதேச அலகில் 11.25 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
நிட்கம்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
நெல்லி : சர்வதேச அலகில் 960 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
பணவெடை: சர்வதேச அலகில் 488 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
பத்தெடை: சர்வதேச அலகில் 60 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
பலம்: சர்வதேச அலகில் 60 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
படி : 2.5 இறாத்தல்.
பிரஸ்குதி: சர்வதேச அலகில் 120 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
பிரஸ்த : சர்வதேச அலகில் 960 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
பிரஸுருதி: சர்வதேச அலகில் 120 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
மஞ்சாடி: சர்வதேச அலகில் 250 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
மணங்கு : 8 வீசை ஒரு மணங்கு.
மணு: சர்வதேச அலகில் 12 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
மவுண்ட்: கண்டி அல்லது பாரம் எனும் அளவையின் இருபதில் ஒரு பங்கு.
மாணிக்க: சர்வதேச அலகில் 480 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
மாஷ: சர்வதேச அலகில் ஒரு கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
வராகன்: சர்வதேச அலகில் 4 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
வீ சை : சர்வதேச அலகில் 1.4 கிலோ கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
ரூபாவிடை : சர்வதேச அலகில் 488 மில்லி கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
லாஸ் : சர்வதேச அலகில் 3840 கிராமுக்கு சமனான ஓர் அளவை அலகு.
முகத்தலளவை தொடர்பானவை.
அங்குஷ்டபிரமாணம்: பெருவிரல் அளவு
அர்த்தசராவ :சர்வதேச அலகில் 256 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
அர்த்தபலம்: சர்வதேச அலகில் 32 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
ஆடகம்: சர்வதேச அலகில் 4.096 லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
ஆம்மிரம்: சர்வதேச அலகில் 64 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
ஆழாக்கு: சர்வதேச அலகில் 168 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
இடங்களி: சர்வதேச அலகில் 2500 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
உரி: சர்வதேச அலகில் 312.50 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
உழக்கு: சர்வதேச அலகில் 336 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கழஞ்சு: சர்வதேச அலகில் 5 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கர்ஷ: சர்வதேச அலகில் 16 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கலம்: சர்வதேச அலகில் 64.512 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கலன்: 6 போத்தல்.
குஞ்சா: சர்வதேச அலகில் 125 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
குறுணி: சர்வதேச அலகில் 5.376 லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கொத்து: 4 சுண்டு (ஒரு milk maid பால் ரின் = ஒரு சுண்டு)
கோட்டை: 168 படி. சர்வதேச அலகில் 200 லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
கோல: சர்வதேச அலகில் 8 மில்லி லீற்றருக்குச் சமனான ஒரு அளவை அலகு.
சங்கு : சர்வதேச அலகில் அண்ணளவாக 30 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
சராவ : சர்வதேச அலகில் 512 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
சாண : சர்வதேச அலகில் 4 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
சிட்டிகை: பெருவிரலளவு.
சிறங்கை: ஒரு கைக்குள் பொத்திப்பிடிக்கக்கூடிய அளவு.
சுண்டைப்பிரமாணம்: சுண்டைக்காயளவு.
சூர்ப: சர்வதேச அலகில் 32.768 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
செவிடு: ஆழாக்கில் ஐந்தில் ஒரு பகுதி .
சோடு: சர்வதேச அலகில் 33.6 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
திரவடிறாம்: சர்வதேச அலகில் 4 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
தம்பிடி: ஒரு கைக்குள் பொத்திப்பிடிக்கக்கூடிய அளவு.
திரிகடிப்பிரமாணம்: மூன்று விரலளவு.
துரோணம்: சர்வதேச அலகில் 14.384 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
துரோணி: சர்வதேச அலகில் 65.536 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
துலாம்: சர்வதேச அலகில் 6.04 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
துாணி: சர்வதேச அலகில் 21.5 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
நாழி: சர்வதேச அலகில் 625 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பதக்கு: சர்வதேச அலகில் 10.75 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
படி: சர்வதேச அலகில் 1250 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பலம்: சர்வதேச அலகில் 64 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பாலடை: சர்வதேச அலகில் அண்ணளவாக 30 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பிரஸ்த: சர்வதேச அலகில் 1024 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பிரஸுருதி: சர்வதேச அலகில் 128 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
பேன்பிடி: பேனைப்பிடிப்பது போன்று பெருவிரலினாலும் சுட்டுவிரலினாலும் கிள்ளியெடுக்கும் அளவு.
போத்தல்: சர்வதேச அலகில் 750 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மஞ்சாடி: சர்வதேச அலகில் 250 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மணா: சர்வதேச அலகில் 480 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மரக்கால்: சர்வதேச அலகில் 5.376 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மாணிக்க: சர்வதேச அலகில் 480 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மாஷ: சர்வதேச அலகில் ஒரு மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
மினிம்: சர்வதேச அலகில் 125 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
முக்குறுணி: சர்வதேச அலகில் 16.1 லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
வீசை: சர்வதேச அலகில் 1562.5 மில்லி லீற்றருக்கு சமனான ஓர் அளவை அலகு.
வெருகடி: ஒரு புனையின் காலடி அளவு அல்லது மூன்று விரல்களால் கிள்ளியெடுக்கும் அளவு.
கால அளவை தொடரபானவை
அகோராத்ர: 24 மணி நேரம்
அத்தப்பிரகரம்:நாலரை நாளிகை நேரம்
அத்தயாமம்:ஒரு நாளில் பதினாறில் ஒரு பாகம்
அயனம்: 6 மாதங்கள்
அக்கினிமேட்சம்:8/25 வினாடி
கடிகை:24 நிமிடம்
கடீ:1 மணி
கலா: 2 நிமிடம்
காஸ்டா: 4 4/5 வினாடி
சங்வர்சர: ஒரு வருடம்
சாமம்: 3 மணித்தியாலங்கள் கொண்ட கால இடைவேளை
தண்டம்: ஒரு நாளிகை அல்லது 24 நிமிடம்
தாசு: 60 நிமிடம் அல்லது இரண்டரை நாழிகை
நாழிகை: 24 நிமிடம்
நிமிடம்: 60 செக்கன்ட்
பட்சம்: 15 நாட்கள்
பிரகர: 3 மணித்தியாலம்
மண்டலம்:40 நாள். 48 நாள் என்பாரும் உண்டு
மணி: 60 நிமிடம்
மாத்திரை: கண்ணிமைப்பொழுது அல்லது கைநொடிப்பொழுது
மாதம்:30 அல்லது 31 நாட்கள்
மினித்து: 60 செக்கன்ட்
முகூர்த்தம்: 90 நிமிடம்
யாமம்: இரவு 10 நாளிகை முதல் இரவு 20 நாளிகை வரையான காலம்
யுகம்: 5 வருடம்
ருது: 60 நாட்கள்
விகலை: வினாடியில் எட்டில் ஒரு கூறு
வினாடி: நிமிடத்தில் அறுபதில் ஒரு பகுதி
நீட்டலளவை தொடரபானவை
அங்குலம்: அடியில் பன்னிரண்டில் ஒரு பங்கு
அங்குலி: சர்வதேச அலகில் 1.5 சென்ரி மீற்றர்
அறத்தி:சர்வதேச அலகில் 41.91 சென்ரி மீற்றர்
இராஜ: சர்வதேச அலகில்55.88 சென்ரி மீற்றர்
கஸ்த: சர்வதேச அலகில்55.88 சென்ரி மீற்றர்
சாண்:சர்வதேச அலகில் 22.86 சென்ரி மீற்றர்
துறுப்ப: 22 அங்குலம். 55.88 சென்ரி மீற்றர்
பம்ப: சர்வதேச அலகில்182.88 சென்ரி மீற்றர்
பாகம்:சர்வதேச அலகில் 182.88 சென்ரி மீற்றர்
மிடிறியன்: அறத்தி. சர்வதேச அலகில் 41.91 சென்ரி மீற்றர்
முழம்:சர்வதேச அலகில்45.72 சென்ரி மீற்றர்
யவமத்திய:சர்வதேச அலகில் 0.3 சென்ரி மீற்றர்
யவோதர:சர்வதேச அலகில் 0.24 சென்ரி மீற்றர்
வியத்:சர்வதேச அலகில்22.86 சென்ரி மீற்றர்
விரற்கடை:சர்வதேச அலகில் 1.95 சென்ரி மீற்றர்
விட்சதி:சர்வதேச அலகில் 22.86 சென்ரி மீற்றர்
றியன்: சர்வதேச அலகில்45.72 சென்ரி மீற்றர்

2 கருத்துகள்:
இவ்வளவையும் எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்! அருமை !
மிக நன்று
கருத்துரையிடுக