17 மே 2009

பாட்டுக்குயில்!





சுந்தரத் தமிழில் எந்தன்

மந்திரக் கனிமொழியை

வந்தனை செய்தே -கவி

பாடு குயிலே !

...

பத்தரை மாற்றுத்தங்கம்

பவளவாய்ப் பசுங்கிளியை

முத்திரை பதித்த பின்னர் -என்

நித்திரை கலைந்ததடியே

...

சித்திரை கடந்த பின்னர்

வைகாசியில் திருமணம்

வாழத்தெமக்கு கூறுகின்றாய்

வரிக்குயிலே!

...

எத்தனை நீ பாடினாலும்

அத்தைமகள் நித்திரைக்கு

பங்கமேதும் செய்திடாதே

பாட்டுக்குயிலே!

...

நித்தமும் உன் பாட்டொலிக்கு

நிஜவடிவம் தரும் கொலுசை- என்

அத்தை மகள் அணிந்திருக்காள் -சத்தத்தில்

ஓடிடாதே காட்டுக்குயிலே!











6 கருத்துகள்:

sakthi சொன்னது…

அய்யோ அழகு தமிழில் அத்தை பெண்ணிற்கான கவிதை
வாழ்த்துக்கள்

sakthi சொன்னது…

try to remove tat word verification na

பெயரில்லா சொன்னது…

அன்றைய பாரதியின் குயில் பாடலை நினைவு கூர்கிறது....அத்தை மகள் நித்திரைக்கு பங்கமேதும் செய்திடாதே கிளியே!!!!!அருமையான வரிகள் இந்த நடை சுவையாய் இருக்கிறது...பாடல் போன்று நானும் பயில முயல்கிறேன்.....வாழ்த்துக்கள்

அனுபவம் சொன்னது…

sakthi கூறியது...

// அய்யோ அழகு தமிழில் அத்தை பெண்ணிற்கான கவிதை
வாழ்த்துக்கள்//

//try to remove tat word verification na//

வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி! word verification எடுக்கும்படி கேட்டிருந்தீர்கள் நான் அனைத்து நண்பர்களினது கருத்துக்களையும் கவனித்து கருத்துரை வழங்க இலகுவாக இருக்கும் என்பதற்காகவே அதை நடைமுறையில் வைத்திருக்கின்றேன். அது உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் நிச்சயம் நீக்கிவிட முயற்சிக்கின்றேன்.‍அன்புடன் தணிகாஷ்.

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

//அன்றைய பாரதியின் குயில் பாடலை நினைவு கூர்கிறது....அத்தை மகள் நித்திரைக்கு பங்கமேதும் செய்திடாதே கிளியே!!!!!அருமையான வரிகள் இந்த நடை சுவையாய் இருக்கிறது...பாடல் போன்று நானும் பயில முயல்கிறேன்.....வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி! அண்மைய மனவேதனைகள் என்னை மிகவும் பாதித்திருந்ததால் ப்ளாக் பக்கம் வரவிலை. உங்கள் கருத்துரைகளை தாமதமாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.‍அன்புடன் தணிகாஷ்.

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமை!