29 மே 2009

மறுபிறப்பு!


மறுபிறப்பை ஏற்கும் எங்கள் மதம்
எண்தொடரில்
எத்தனையாம் பிறப்பதுவோ எந்தனுக்கு?
யானறிதல் கூடுதில்லை மர்மமதை!

மறுபிறப்பு???
என்ன பம்மாத்தோ
பாரினில் இப்பழங்கதைகள்!
நானறிய முடியாத மறுபிறப்பை
நம்பவைக்கும் நயமான பரப்புரைகள்!
அப்படித்தான் என்றாலும்,
இச்சென்மத்தில் எந்தனுக்கு
சென்ற பிறப்புப் பற்றி
மறதியும் கிறதியுமாய் இருப்பதன் மர்மமென்ன?
எப்படித்தான் நினைத்தாலும்
என் மனதுக்கேற்பில்லை‍‍ -எம்
மதம் கூறும் மறு பிறப்பும்!

உடலிரண்டில் உள்ளமொன்றாய்
காதலித்துப் பல நாள்
கதை பேசித்திரிந்து விட்டுக்
காய் வெட்டிப் போனவளை
கை கழுவி விட்டு விட்டுத்
தூயவள் ஒருத்தியை நான்
கைப்பிடித்து வாழும் வாழ்க்கை
மறு பிறப்பு என்றிடலாம்
ஏனென்றால்,
கடந்து போன என் வாழ்க்கை
கனவாய் வந்து மறைகிறது -அவள்
கசக்கி எறிந்த என் இதயம்
சுருக்கம் நிமிர்ந்து மிளிர்கிறது!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இம்மை தரும் வேதனைக்கு இப்பிறவியே போதும்..மறு பிறவி இனியதற்கு......

செயல் புரியத்தெரியாதவன் செயவதறியாது திக்கிப்பவன் சொல்லும் கருத்துத்தான் இந்த மறுபிறவி....அழகாச் சொல்லியிடுக்க தணிகாஷ் புதுசா வித்தியாசமான பதிவுகளில் இது ஒன்று......

அனுபவம் சொன்னது…

நேரத்தை செலவு செய்து ஒவ்வொரு ஆக்கத்தையும் வாசித்து கருத்துக் கூறுகிறீர்கள். நன்றி தமிழரசி!அன்புடன் தணிகாஷ்