25 ஜூன் 2009

மலர் அல்லது மானம்

மொட்டொன்று அரும்பியது
மலரும் நாள் பார்த்திருந்தேன்
சட்டென்று ஒரு நாள் -என்
முகம் பார்த்து சிரிக்குமது
மட்டில்லா மகிழ்ச்சி கொள்ளும்
மணந்து நான் சுகம் பெறுவேன் .....

கட்டவிழ்ந்து ஓடிய என்
கற்பனைக்கு முடிவாக
சட்டென்று ஓர் காலை
சொட்டென்று தேன் வழிய
சுந்தரியாள் முகம் மலர்ந்தாள்

எட்ட மணம் வீசும் அத்தர் மணத்தழகி
அவளுக்கே அபாயமென்று
அவளறியாள் அவள் கவர்ச்சி
கண்பட்ட கன்னியரின்
கற்பதனை சூறை கொள்ளும் கயவனாம்
எங்கிருந்தோ வந்ததோர் கருவண்டு
பார்த்திருந்த என்னெதிரே
பலாத்காரமாய் முத்தமிட்டு -அவள்
கற்பதனை காவுகொண்டு கர்ச்சித்துப் பறந்ததடா!
மனமழிந்து முகம் கசங்கி-என்
மங்கையவள் தலை குனிந்தாள்
உள்ளமெலாம் நோக உணர்வெல்லாம் கெட்டழிய
ஒரு பொழுதே எந்தனுக்கு
யுகமொன்றாய் கழிந்தது காண்!

சிந்தனையே கனவாக நொந்தலைந்த மனத்தோடு
காலை விடிந்தவுடன்
கண்மணியாள் பக்கம் சென்றேன்!

கண்டதோர் காட்சியதால்
தலை சுற்றி நிலம் சாய்ந்தேன்!
மானமொன்றே பெரிதென்று-என்
மங்கையவள் கருதியதால்
வாழப்பிடிக்காமல் வையகத்தில் இருக்காமல்
அங்கங்கள் சிதற அவள்
அழித்திருந்தாள் வாழ்வதனை!

6 கருத்துகள்:

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

நன்று..,

அனுபவம் தலைப்பு மட்டுமா?

பெயரில்லா சொன்னது…

வார்த்தைகள் இல்லை....இது முகஸ்துதியும் இல்லை...வார்த்தைகள் வழி மறித்து மொழிகள் விழி மறிக்கிறது...

எண்ணே வண்ணம் இந்த கவிதையில் உந்தன் எண்ணம்....

என்றாவது ஒரு நாளேனும் இப்படி எழுத என்பால் இயலுமா? முயன்றுப் பார்த்தாலும் முடியவே முடியாது ...மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது தணிகாஷ்....இதை விகடனுக்கு அனுப்புங்களேன்....

Muniappan Pakkangal சொன்னது…

Avalukke abaayamendru avalariyal aval kavarchi-nalla vaarthaihal Thankash.

அனுபவம் சொன்னது…

SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
//நன்று..,

அனுபவம் தலைப்பு மட்டுமா?//

உங்கள் ஊக்கமான பின்னூட்டல்களுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி SUREஷ் நிச்சயமாக தலைப்பு மட்டுமல்ல அனுபவம். மீண்டும் நன்றிகள்!

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
//வார்த்தைகள் இல்லை....இது முகஸ்துதியும் இல்லை...வார்த்தைகள் வழி மறித்து மொழிகள் விழி மறிக்கிறது...

எண்ணே வண்ணம் இந்த கவிதையில் உந்தன் எண்ணம்....

என்றாவது ஒரு நாளேனும் இப்படி எழுத என்பால் இயலுமா? முயன்றுப் பார்த்தாலும் முடியவே முடியாது ...மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது தணிகாஷ்....இதை விகடனுக்கு அனுப்புங்களேன்....//

உங்கள் கருத்துரையே கவிதையாக மலர்ந்திருக்கிறது.நன்றிதமிழரசி!
முகஸ்துதியல்ல என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள் எனக்குத்தெரியாது. நீங்கள்
“என்றாவது ஒரு நாளேனும் இப்படி எழுத என்பால் இயலுமா?“ என்றது சும்மாதான். உங்கள் கவிதைகள் முன் இது ஒரு தூசுதான். விகடனுக்கு அனுப்பச்சொன்னீர்கள் நன்றி

அனுபவம் சொன்னது…

Muniappan Pakkangal கூறியது...
Avalukke abaayamendru avalariyal aval kavarchi-nalla vaarthaihal Thankash.

வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழர் Muniappan அவர்களே!