25 அக்டோபர் 2009

கிழக்கில் அதிசயங்கள்!

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலினுள்ளிருந்து(கோயில் மூடிய நிலையில்) சில தினங்களில் குறிப்பிட்ட சில வேளைகளில் சிலம்போசை கேட்டதை பல இடங்களிலிருந்தும் மக்கள் சென்று கேட்டது அந்த அதிசயிக்கத்தக்க சம்பவங்களில் ஒன்றாகும்.

மற்றுமொரு சம்பவம் திருக்கோயிலை அடுத்துள்ள காஞ்சிரங்குடாவில் வறட்சி காரணமாக நிலம்வெடித்துள்ள மேட்டு நிலப்பகுதியில் நீர் ஊற்றெடுத்து வெளியேறியமையாகும்.பக்கத்திலுள்ள நிலம் வறட்சியினால் வெடித்துள்ள நிலையில் இது அதிசயம் என்றே மக்களால் கருதப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடியில் பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள பெரிய வேப்ப ம‌ரத்தின் கிளைகளிலிருந்து தேன் போன்று ஒரு திரவம் வடிந்து கொண்டிருப்பது மற்றுமொரு அதிசயமாகும்.இந்த திரவம் இனிமையாகவும் வேப்பம் பழத்தின் சுவையுடையதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அதிசயிக்க தக்க நிகழ்வாக கல்லடி பேச்சியம்மன் கோயிலிலுள்ள‌
தேற்றாமரத்தில் அம்மன் உருவத்தின் படிவினையும் மக்கள் தரிசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல கடவுள்களின் உருவமும் தெரிவதாகக் கூறும் மக்கள் சிலருக்கு தோன்றவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முன்னரான இடுகையில் நிந்தவூரில் வெளிப்பட்ட கடற்கன்னி பற்றியதகவல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

தணிகாஷ்,இந்த அதிசயங்கள் என்ன என்பதே புதிராக இருக்கிறது.
உண்மையில் எங்கள் தேசத்தில் அதிசயங்களும் தெய்வங்களும் உண்மையானால் எத்தனையோ அதிசயங்கள் தர்மத்தின் பெயரால் நடந்திருக்க வேணும் !

அனுபவம் சொன்னது…

//பிளாகர் ஹேமா கூறியது...

தணிகாஷ்,இந்த அதிசயங்கள் என்ன என்பதே புதிராக இருக்கிறது.
உண்மையில் எங்கள் தேசத்தில் அதிசயங்களும் தெய்வங்களும் உண்மையானால் எத்தனையோ அதிசயங்கள் தர்மத்தின் பெயரால் நடந்திருக்க வேணும் !//

அப்படி நடக்கவில்லையே ஹேமா? நடப்பதை மட்டும் காண்போம்!
இல்லையா?