08 நவம்பர் 2009

என் காதல் தேவதை


கனவுக்கு அர்த்தம் சொல்லக்
காதலி வந்தாளாம்‍ -என்
காதலுக்கு உயிர் கொடுக்க
கண்ணகி வந்தாளாம்


வாழ்க்கைக்கு ஒரு ஒளிகொடுக்க
வான்மதி வந்தாளாம்
வாசமலர் தேன் கொடுக்கத்
தேடி வந்தாளாம்


ராமன் கண்ட சீதை அல்லோ
எந்தன் சிறிதேவி
வாழ்க்கைக்கு நற்பயன் கொடுக்க
அவளே என் ராசி


வாழ்க்கை எனும் போராட்டத்தில்
வெற்றித்தேவதையாம்
ஆயுள்பலம் வாங்கிவந்த
அழகு ரோஜாவாம்பெண்களுக்கு விதிவிலக்காய்
திருமகள் இவள்தானே
திருஷ்டி சுற்றிப்போடுங்கடி
தெய்வ மகளுக்கு

4 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

பெண்களுக்கு விதிவிலக்காய்
திருமகள் இவள்தானே
திருஷ்டி சுற்றிப்போடுங்கடி
தெய்வ மகளுக்கு////

அழகாக எழுதிய வரிகள்!!

பெயரில்லா சொன்னது…

எப்படி எப்படியெல்லாம் உருமாறி உள்ளம் மாறாமல் உங்களை வடிவமைத்து இருக்கிறாள் அந்த தேவதைப் பெண்..

அனுபவம் சொன்னது…

//தேவன் மாயம் கூறியது...

பெண்களுக்கு விதிவிலக்காய்
திருமகள் இவள்தானே
திருஷ்டி சுற்றிப்போடுங்கடி
தெய்வ மகளுக்கு////

அழகாக எழுதிய வரிகள்!//

நன்றி தேவன்மாயம்!

அனுபவம் சொன்னது…

//பிளாகர் தமிழரசி கூறியது...

எப்படி எப்படியெல்லாம் உருமாறி உள்ளம் மாறாமல் உங்களை வடிவமைத்து இருக்கிறாள் அந்த தேவதைப் பெண்..//

பெண்ணுங்க சாமர்த்தியமே அதுதானே தமிழ்!