07 ஜனவரி 2010

கடவுள் படைத்த மனிதன்!


ஆட்டங்கள் போட்டு
அகிலத்தை நடுங்க வைத்து
அண்டங்களெல்லாம்
ஆர்ப்பரித்து அமைதிகொள்ள
கண்டெங்கள் இறைவன்
கடல் நடுவே அமைதி கண்டான்

ஊழி அடங்கியதும்
உறங்கியவன் கண்விழித்து
ஆழி நடுவே- தன்
அநாதை நிலை உணர்ந்து கொண்டான்
"காளி கூளி என்ற
பேய்ப்படைகள் தூண்டியல்லோ
ஊழியை நான் நடத்திவிட்டேன்
உலகனைத்தும் அழித்துவிட்டேன்
உலகோடு உயிர் அழித்து -என்
உடைமையெல்லாம் தொலைத்துவிட்டேன்"
என்று ப‌ல‌ நினைந்து
நொந்து பின்னர்தெளிந்து கொண்டான்

உலகோடு
உயிர்களெல்லாம் இல்லையென்றால்...
எனக்கேது வேலையென்று?
மீண்டும் தன் தொழில் தொடங்க‌
மனிதனென்றோர் விலங்கு செய்தான்
ஒன்றே பலவாகி பலவாயிரமாகி
கண்டங்களெங்கும்
கனகோடி மனிதர் வந்தார்

விலங்காகப் பிறந்தவனே
விலங்கினின்றும் பிரிந்து சென்றான்
கல்லாயுதங்கொண்டு
காட்டினிலே வேட்டை செய்தான்
காலங்கள் கடந்து சென்று
வில்லாயுதம் படைத்தான்
வில்லாயுதம் கொண்டு
வில்லங்கமாய்ப் போர்தொடுத்தான்
பலகாலம் கடந்து வந்து
பல்குழலாயுதம் படைத்தான்
பார் முழுதும் தனதாக்கப்
போர் தொடுத்து உயிரழித்தான்
உயிரழித்த அவனறிவால்
உயிர் படைக்க வழி சமைத்தான்

தன்திறனை விருத்தி செய்து
சந்திரனில் கால் பதித்தான்
இயற்கைக்கும் தொல்லை செய்தான் -உலகையவன்
எல்லை செய்தான்

ஓராயிரமாண்டு
ஒப்பற்ற விந்தை செய்தான்
ஈராயிரமாண்டில்
இல்லை உலகென்றான்

இயற்கைக்குப் பயந்த அவன்
இயற்கையையே வணங்கி நின்றான்
செயற்கையிலே கடவுள் செய்து -தன்
எண்ணம் போல் உருக்கொடுத்தான்

அணுவுக்கு அணுவாய்
அப்பாலாய் நின்ற தெய்வம்
அணுவைப் பிளந்தவனின்
அறிவுக்கும் எட்டுதில்லை

காபனை உயரவைத்தான்
காலநிலை மாறவைத்தான்
ஒசோனில் ஓட்டை என்றான
"ஓபன் ஹெகன்" என்றான்
எல்லாம் அவன் படைப்பான்
கடவுளுக்கு வேலையில்லை

கடவுள் படைத்ததெல்லாம் -அவன்
கால் தூசும் பத்தாது!

14 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

போலாம் ரைட்...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

ஆழமான கவிதை நண்பரே..
அருமை!!

பெயரில்லா சொன்னது…

பாராட்ட வார்த்தையில்லை.. நடைமுறையை கவிதையின் ஊடே மிகவும் அழகாக நயம்பட சொல்லியிருக்கீங்க,,,,,,,,

அனுபவம் சொன்னது…

//கலையரசன் கூறியது...

போலாம் ரைட்..//

ஓகே அனுமதி கிடைச்சா பிறகென்ன? போயிடுறன்.
நன்றி! நன்றி கலையரசன்.

அனுபவம் சொன்னது…

//பிளாகர் முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

ஆழமான கவிதை நண்பரே..
அருமை!//

நன்றி! உங்களைப்போன்ற பெரியவர்களது கருத்துக்களே என்போன்றவர்களை வளப்படுத்தும்.
நன்றி சேர்!

அனுபவம் சொன்னது…

// தமிழரசி கூறியது...

பாராட்ட வார்த்தையில்லை.. நடைமுறையை கவிதையின் ஊடே மிகவும் அழகாக நயம்பட சொல்லியிருக்கீங்க,,,,,,,,//

நன்றிம்மா தமிழ்! மனம் குளிருது.
நன்றி!

அனுபவம் சொன்னது…

// தமிழரசி கூறியது...

பாராட்ட வார்த்தையில்லை.. நடைமுறையை கவிதையின் ஊடே மிகவும் அழகாக நயம்பட சொல்லியிருக்கீங்க,,,,,,,,//

நன்றிம்மா தமிழ்! மனம் குளிருது.
நன்றி!

ஹேமா சொன்னது…

படைச்ச கடவுளே வாயடைச்செல்லோ நிக்கிறார் இப்ப !நல்ல கவிதை...சிந்தனை தணிகாஷ்.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் உறவே.

அனுபவம் சொன்னது…

பிளாகர் ஹேமா கூறியது...

படைச்ச கடவுளே வாயடைச்செல்லோ நிக்கிறார் இப்ப !நல்ல கவிதை...சிந்தனை தணிகாஷ்.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் உறவே.

//உண்மையாவா? நன்றிம்மா ஹேமா நன்றி! உங்களுக்கும் எனது காலம் கடந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்! கோபிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் உறவே!//

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...

அனுபவம் சொன்னது…

அண்ணாமலையான் கூறியது...
நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...

ரொம்ப நன்றிங்க!
நீங்க இந்தப்பக்கம் அடிக்கடி வரணுங்க!

உருத்திரா சொன்னது…

நன்றாக இருக்கிறது ,தொடருங்கள் ,வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

LoolPO casodex 25mg mzRUNp evecare buy JRoGoM menosan free pills iMjjsC ventolin ed Jhcbpc tizanidine world shipping mOMSzk indocin without prescription BOmBgq gyne-lotrimin visa/mastercard/amex/echeck

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.