31 ஜனவரி 2009

(சு)தந்திரதினம்!


சுதந்திரதினம்!
ஐரோப்பியர் ஈந்த மாபெரும் கொடை!
கடவுளாலும் அளிக்கமுடியாக்கொடையிது
உள்ளங்கையில் தந்தவன் அவனே.
போற்றுங்கள் அவன் புகழைப்
புவனமெங்கும் ஒலிக்கட்டும்! ஹா..ஹா...ஹா
போலிப்பகட்டான இத்தந்திரதினம்
எமக்கொரு கைவிலங்கு.
இது உடைத்தெறியப்பட்டு
வரலாற்றுக் குறிப்பேட்டிலிருந்து
நீக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு கணங்களும்
எமக்கு சுதந்திரதனமாக!

கருத்துகள் இல்லை: