02 பிப்ரவரி 2009

இவன்தான் மனிதன்!

நெருங்கமுடியாதபோது
பெண்ணின் முகம் என்றான் நிலாவை.
நெருங்கியபோது முகத்தில் கால் பதித்தான்.
பெண்ணைக் கண்டபோது இனித்த்து
கரம்பிடித்தபோது கசந்தது.
தூர நின்று தேவதை என்றான்.
கிட்டவந்து பேய் என்றான்.
வாழும்போது நாய் என்பான்.
மாண்டபோது தாய் என்பான்.