07 பிப்ரவரி 2009

காதல் தொல்லை!


பெண்: என்னையா மச்சானே
நல்லாத்தான் இருக்கோ
ஏனிங்கு நிற்கிறேன் நான்?
நீ ஏனென்றும் கேளாம்ப்போனா
நான் என்னபண்ணுவேன்?

ஆண்: அடி போடி கள்ளி ஓம் பம்மாத்து
வேணாம் என்னிடத்திலே
இது பொல்லாத காலம்டி போயிடு நீ
சனங்க கண்டாலே கத கட்டிடுவாங்க.

பெண்: நமக்கென்ன மச்சானே கட்டட்டுமே
நான் நாள்முழுக்க ஒன்னயே நெனச்சிருக்கன்.
கட்டிடு நீ என்கழுத்தில் தாலி ஒண்ண
இல்லாட்டி மாட்டிவிடு சுருக்கு ஒண்ண.

ஆண்: கண்ணாளம் என்பதொரு கடிவாளம்டி
அத அறிஞ்சா நீ மறுபேச்சுப் பேசாதடி.

பெண்: நீங்க உபாத்தியாயர்தானதனான் ஏத்துக்கிறேன்
இந்த உபதேசம் எனக்கொண்டம் வேணாமையா.

ஆண்: நான் பரதேசம் போனாலும் போவேனடி
இந்தக் கண்ணாளம் மட்டுமிங்கு வேணாமடி.

பெண்: ஏன்தானோ உமக்கிந்தக் கல்மனசு
என் காதல நீர் இப்படிஇம்சிக்கிறீர்?

ஆண்: எத்தனைதான் சொன்னாலும் புரியுதில்ல
ஏன்தானோ உன் செவிகள் செவிடாச்சோ?

பெண்:எங்கேதான் சென்றேனும் மாச்சுக்கிறேன்
முடிஞ்சா நீ என் உசிர காத்துப்புடு.
போறேன் நான் போறேன் நான் போறேனையா.....