18 மார்ச் 2009

உன்னில் விழுந்தேன் என்னை இழந்தேன்!-சங்கமம் போட்டிக்காக‌

க‌ல்லூரி வந்தேன் காத‌ல் ப‌யின்றேன்
க‌லைக‌ள் ம‌றந்தேனடி-உன்னைத்
தலைமேற் சுமந்தேனடி!

கைக்குட்டை தந்தாய் காதல் வளர்த்தாய்‍‍‍
கண்ஜாடை உரமாக்கினாய் -என்னை
மண்ணுக்கு உரமாக்கவா?

சிட்டாக நானும் சுற்றித்திரிந்தேன்
சுமையேதுமறியாமலே-வாழ்வின்
சுமையேதுமறியாமலே
பிரிவென்ற‌ சுமையைத் த‌லைமீது வைத்தாய்
எவ்வாறு நான் தாங்குவேன்?

உன்னை நினைந்தேன் -என்
அன்னை ம‌ற‌ந்தேன்
அவ‌ள் உதிர‌த்தை உர‌மாக்கினாள்-நீயென்
உள்ள‌த்தை விற‌காக்கினாய்.

குயிற்குஞ்சை வ‌ள‌ர்த்து கொத்தித் துர‌த்தும்
காக்கை நீதானடி- க‌ருங்
காக்கை நீதானடி.
ந‌ஞ்சொன்று வ‌ந்துன் நெஞ்சிற்புகுந்து
வஞ்சங்க‌ள் ப‌ல‌ செய்த‌து -என் வாழ்வில்
வஞ்சங்க‌ள் ப‌ல‌ செய்த‌து.

உன் வலையில் விழுந்தேன்- நான்
கலையில் விழுந்தேன்.
வாழ்க்கைக்குத் தீமூட்டினேன்- என்
வாழ்க்கைக்குத் தீமூட்டினேன்.

உன் எழிலை நினைந்தேன்- நான்
கவிதை புனைந்தேன் -ஒரு
தொழில்கூடக் கற்றேனில்லை-வாழும்
வழிகூடக் கற்றேனில்லை.

பாடம் மறந்தேன் நான் பரீட்சை மறந்தேன்‍- என்
வீடும் மறந்தேனடி.
விழியில் விழுந்தேன் உன் மொழியில் விழுந்தேன் -படு
குழியில் விழுந்தேனடி!
Free Signature Generator

Free Signature Generator
சங்கமம் போட்டிக்காக‌

23 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\உன் வலையில் விழுந்தேன்- நான்
கலையில் விழுந்தேன்.\\

அழகாயிருக்கு

வலை வழி
உன் வரிகள் அறிந்தேன்
நானும் கலைஞனாக எழுந்தேன் ...

அனுபவம் சொன்னது…

நன்றி நண்பர் ஜமால் அவர்களே! உங்கள் வார்த்தைகள் உற்சாகமளிக்கின்றன.
உங்கள் நட்பை நாடுகிறேன்
-அன்புடன்
தணிகாஷ்.

டவுசர் பாண்டி சொன்னது…

//க‌ல்லூரி வந்தேன் காத‌ல் ப‌யின்றேன்//



இதுக்கு தான்பா நா காலேஜீ பக்கமே போலெ.

டவுசர் பாண்டி சொன்னது…

//உன்னை நினைந்தேன் -என்
அன்னை ம‌ற‌ந்தேன்//

பத்தியா, பத்தியா ? இன்னா அக்குரும்பு இது? நம்பல பெத்த அம்மாவ மறந்துடுவாராம், இன்னா கோராமபா இது .

டவுசர் பாண்டி சொன்னது…

//தொழில்கூடக் கற்றேனில்லை-வாழும்
வழிகூடக் கற்றேனில்லை.//
இண்ணத்துக்குப்பா ! உன்க்கு தொழீலு, பேசாத நம்ப கூட வந்துடு நைனா !

டவுசர் பாண்டி சொன்னது…

//படு
குழியில் விழுந்தேனடி//

பத்தியா ! நா அப்பவே நென்ச்சேன் இந்த மேரி ஆளுங்கள நம்பாதே இன்னு .

சோக்கான கவீத தான் தலீவா ! நம்ப எவ்ளவோ சொன்னாலு இந்த காதலு கீதளுன்னு, சுத்தற ஆளுங்கள மாத்த முடில.

மறு கா சொல்றேன் தூள் டக்கரு கவீத.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//குயிற்குஞ்சை வ‌ள‌ர்த்து கொத்தித் துர‌த்தும்
காக்கை நீதானடி- க‌ருங்
காக்கை நீதானடி.//

என்ன ஒரு பாசம்

அனுபவம் சொன்னது…

வாங்க டவுசர் பாண்டி உங்கூடகொஞ்சம் பேசணும்!

/க‌ல்லூரி வந்தேன் காத‌ல் ப‌யின்றேன்/

//இதுக்கு தான்பா நா காலேஜீ பக்கமே போலெ.//

என்ன‌ப்பா செய்ய உன்போல‌ முற்கூட்டியே சிந்திக்கும் அறிவு என‌க்கு இல்லாம‌ போயிட்டே!

/உன்னை நினைந்தேன் -என்
அன்னை ம‌ற‌ந்தேன்/


//பத்தியா, பத்தியா ? இன்னா அக்குரும்பு இது? நம்பல பெத்த அம்மாவ மறந்துடுவாராம், இன்னா கோராமபா இது.//

பாத்த‌வ‌ளுக்காக‌ பெத்த‌வ‌ள‌ ம‌ற‌ன்திட்ட‌ன்ப்பா பாவி...

/தொழில்கூடக் கற்றேனில்லை-வாழும்
வழிகூடக் கற்றேனில்லை./


//இண்ணத்துக்குப்பா ! உன்க்கு தொழீலு, பேசாத நம்ப கூட வந்துடு நைனா !//

கண்டிப்பாப்பா நம்மாளுங்களுக்கு உன்போல‌ ஒரு கூட்டம் வேணும்ப்பா. நானும் உங்கூட‌ வ‌ந்துடுற‌ன்.

/படு
குழியில் விழுந்தேனடி/


//பத்தியா ! நா அப்பவே நென்ச்சேன் இந்த மேரி ஆளுங்கள நம்பாதே இன்னு .
சோக்கான கவீத தான் தலீவா ! நம்ப எவ்ளவோ சொன்னாலு இந்த காதலு கீதளுன்னு, சுத்தற ஆளுங்கள மாத்த முடில.

மறு கா சொல்றேன் தூள் டக்கரு கவீத.//

ந‌ம்பிக்க‌தான் வ‌ழ்க்கைன்னு ந‌ண்ப‌ன் சொன்னானுங்க‌ அதான் அவ‌ள‌ ந‌ம்பிட்ட‌ன். இந்த‌ நாச‌மாப்போன‌ காத‌ல் தோற்றாலும் ப‌ர‌வால்ல‌ங்க‌.சோக்கான‌ க‌வித‌ எங்கிறீங்க‌ அதாவ‌து வெற்றி பெற்றிடுமுன்னா...

அனுபவம் சொன்னது…

வாங்க தோழர் SUREஷ்!

/குயிற்குஞ்சை வ‌ள‌ர்த்து கொத்தித் துர‌த்தும்
காக்கை நீதானடி- க‌ருங்
காக்கை நீதானடி./


//என்ன ஒரு பாசம்//

இப்படித்தாங்க சிலர் வே(பா)சம்.

*இயற்கை ராஜி* சொன்னது…

nalla iruku:-)

டவுசர் பாண்டி சொன்னது…

காதலீக்கீரவங்கோ பொய்யான ஆளா இருக்கலாம்பா !

ஆனா

காதலு கண்டி பொய் இல்லன்னு சொல்றாங்கோ அது மெய்யாலுமா தலீவா !

டவுசர் பாண்டி சொன்னது…

நம்புளுக்கு ஒன்நோர்தறு சொன்னது தான்பா !
நாபகம் வர்து ,

அந்த கவீத

"காதலு செய் ஆனா அது கண்டி
கெலீக்காதே !"

கரீக்டாபா !

அனுபவம் சொன்னது…

நன்றி இயற்கை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக! உங்கள் பக்கமும் வருகிறேன்.
அன்புடன்.
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

வாங்க‌ பாண்டி

//காதலீக்கீரவங்கோ பொய்யான ஆளா இருக்கலாம்பா !
ஆனா
காதலு கண்டி பொய் இல்லன்னு சொல்றாங்கோ அது மெய்யாலுமா தலீவா !//

உண்மைதானுங்கோ, காத‌ல‌ர்க‌ள் தோற்க‌லாம். காத‌ல் தோற்காது!

//நம்புளுக்கு ஒன்நோர்தறு சொன்னது தான்பா !
நாபகம் வர்து ,
அந்த கவீத
"காதலு செய் ஆனா அது கண்டி
கெலீக்காதே !"

க‌ரீக்ட்தாம்பா. ஆனா நம்மால முடியாதுப்பா

டவுசர் பாண்டி சொன்னது…

//க‌ரீக்ட்தாம்பா. ஆனா நம்மால முடியாதுப்பா//
- அனுபவம் கூறியது..


பாத்தியா, என்னாமேரி கவித எழ்தர

அள்ளுங்க எல்லாம் நம்ப கூட சேந்து

நம்பலாட்டமே !! ஆய்டாங்கோ !!!

இன்னா பண்றது சொல்லு ..?????????

அனுபவம் சொன்னது…

என்ன டவுசர் பாண்டி உங்களுக்கு தெரியாதா " பன்றியோடு கூடிய கன்றும்...." என்பது? ஹீ..ஹீ...

வியா (Viyaa) சொன்னது…

nice poem..
alagana varigal

பெயரில்லா சொன்னது…

idhu kathala kavithaiya eppadi nugarveen....kalviyaiyum ezhanthu kathalaiyum thuranthu...valigalai mattumey vangi vanthaaya...elangaiel eezhamum illai eeramum illai ethayamum illaiya..........ennalgal mattumeyvaa

அனுபவம் சொன்னது…

//nice poem..
alagana varigal//



நன்றி வியா! உங்களைப்போல் நண்பர்களே எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறார்கள்.

அன்புடன்

தணிகாஷ்.

அனுபவம் சொன்னது…

//idhu kathala kavithaiya eppadi nugarveen....kalviyaiyum ezhanthu kathalaiyum thuranthu...valigalai mattumey vangi vanthaaya...elangaiel eezhamum illai eeramum illai ethayamum illaiya..........ennalgal mattumeyvaa//

காதல் என்று சொல்ல அப்படி கல்லூரியில் எனக்கு ஒரு அனுபவம் கிடைக்கவில்லை. கல்வியை இழக்கவில்லை. இழப்பதற்குக் காதலும் இருக்கவில்லை. ஈழம் எங்கள் கனவாய் இருக்கிறது.(காலாவதியாகாத கனவுகள் கற்பனைகளோடு...க‌விதை ப‌டியுங்க‌ள்)ஈர‌ம் சில‌ இட‌ங்க‌ளில் உண்டு. இத‌ய‌ம் எல்லோருக்கும் இருக்கிற‌து. சில‌ருக்குப் ப‌ழுத‌டைன்து போய்.
இன்ன‌ல்க‌ள்தான் அதிக‌ம் என்ப‌தே உண்மை.
அன்புட‌ன் த‌ணிகாஷ்

பெயரில்லா சொன்னது…

nandri thelivu paduthiyamaikku nanba....

Venkatesh Kumaravel சொன்னது…

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

அனுபவம் சொன்னது…

விமர்சனத்துக்கு நன்றி வெங்கிரஜா அவர்களே!