06 ஏப்ரல் 2009

எனக்காகப் பிறந்த பூவை..!



குறுவாழ்க்கை கொண்டெனைக்
கொல்லப் பிறந்திட்ட மாதே
சிறு தூரம் இருந்தே-உன்
மணம்வீசி யென்னை
அள்ள நினைப்பாயோ கண்ணே!

மொட்டவிழ்ந்தவுன் வட்ட முகத்திரை
பொட்டணிந்திட நான் பிற‌ந்தேனம்மா
கிட்ட‌வ‌ன்தேயுனைத் தொட்ட‌ணைத்திட‌
வ‌ரம் த‌ர‌வேண்டு நீ அம்மா

ப‌ஞ்ச‌ணைமீதினில் ப‌டுத்திருந்தாலுமென்
நெஞ்சினில் எரியுது தீயே -உனை
முத்த‌மிட்ட‌ தென்ற‌ல் வ‌ந்த‌தை
மூட்டிவிட்ட‌தென் பூவே!

அனும‌தியின்றியுன் தேனினை யுண்டிட‌
அவ‌ச‌ர‌ம் என‌க்கிலை மாதே -பெரு
வெகும‌தி என்னிட‌மில்லை என்றால்
ம‌றுபிற‌வியில் கொண்டு நான் வ‌ருவேன்

வ‌ஞ்ச‌க‌ம் கொண்டு உன்
க‌ற்பினை அழித்திடேன்
அஞ்சிடாதேய‌டி க‌ண்ணே -என்
நெஞ்சினில் விஞ்சுதே -உனை
கொஞ்சிடும் ஆசையே தீயாய்!

காற்றுனைத் தொட்டாலும் -மாற்றான்
க‌ழுத்தில் நீ மாலையாய் விழுந்தாலும்
ஆற்றாம‌ல் நானிங்கு உயிர் துற‌ப்பேன்

நீ இத‌ழாக‌ உதிர்ந்தாலும் -என்
இத‌ய‌த்தில் விழ்வேண்டும் -நீ
என‌க்காக‌ பிற‌ந்த‌வ‌ள் பூவே!





6 கருத்துகள்:

*இயற்கை ராஜி* சொன்னது…

nice:-)

டவுசர் பாண்டி சொன்னது…

நல்லா தான் கீது,
(நம்ப மரமண்டைக்கு தான் எதுமே பிரில, இதுக்கு தான் ஒயுங்கா இஸ்கூலுக்கு போநோன்றது )

கட்சீல சொன்னது

//நீ இத‌ழாக‌ உதிர்ந்தாலும் -என்
இத‌ய‌த்தில் விழ்வேண்டும் -நீ
என‌க்காக‌ பிற‌ந்த‌வ‌ள் பூவே!//

இன்னோ என் காதுல கீது பா, சூப்பர் பா !!!!

அனுபவம் சொன்னது…

மிக்க நன்றி இயற்கை!
மீண்டும் வாருங்கள்.
காத்திருக்கிறேன் உங்கள் வருகைக்காக.

அன்புடன்
-தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

மிக்க நன்றி டவுசர் பாண்டி ! மீண்டும் வாருங்கள்!
வரும்போது வேட்டி கட்டி வந்தால் அழகாக இருக்கும் சகோதரனே!
செய்வீர்களா???

அன்புடன்
-தணிகாஷ்

தமிழிசை சொன்னது…

Its really gud :)

அனுபவம் சொன்னது…

தமிழிசை கூறியது...
//Its really gud :)//

very very thanks for your comment that comes from the base of ur heart!