05 ஏப்ரல் 2009

தமிழ்தான் என் உயிர்!




தமிழே !
என் உயிரே!!
என் வாழ்வே!!!

த‌மிழ் எனது மொழி!
தமிழ்!
அது எனது சொந்தம்!
அவள் என‌க்காக‌ப் பிறந்த‌வ‌ள்.

அவ‌ள் என்ன‌வ‌ள் என்ப‌தால்
அவ‌ள் நாள‌ங்க‌ளில் பாயும்
உதிர‌த்தின் ஓசை
என் இத‌ய‌த்தில் எதிரொலிக்கும்!
அது என் "உயிரோசை"!
அவ‌ள் உண்மையே பேசுவ‌தால்
அவ‌ளிட‌ம் பிற‌ப்ப‌து "மெய்யோசை"
"உயிரோசை" "மெய்யோசை"
இர‌ண்டுமே அவ‌ள் "எழுத்தோசை"

தினமும் நான் கேட்பது தமிழோசை!
கற்றிட விரும்புவது தமிழிசை!
செய்திட நினைப்பது தமிழ்ப்பணி

"த‌மிழ்" துன்ப‌ப்ப‌ட்டால்..
த‌மிழ‌ர்க‌ள் துன்ப‌ப்ப‌ட்டால்...
நான் சந்‌தோச‌ப்ப‌டுவேனோ?

த‌மிழே நீ க‌ல‌ங்காதே!
அண்ணனாய் தம்பியாய்
மகனாய் மருமகனாய்
உன் காதலனாய்
என்றும் நான் உன் உற‌வாய்

Free Signature Generator

8 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//தினமும் நான் கேட்பது தமிழோசை!
கற்றிட விரும்புவது தமிழிசை!
செய்திட நினைப்பது தமிழ்ப்பணி
//


வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//த‌மிழே நீ க‌ல‌ங்காதே!
அண்ணனாய் தம்பியாய்
மகனாய் மருமகனாய்
உன் காதலனாய்
என்றும் நான் உன் உற‌வாய்//

nice..

நட்புடன் ஜமால் சொன்னது…

காதிருப்பவர் அனைவருக்கும் ஓசை கேட்க்கும்.

கேட்க்கலாம் ஓசைகளை ...

நல்லாருக்கு

அனுபவம் சொன்னது…

நன்றி தோழர் SUREஷ் அவர்களே ! உங்கள் வாழ்த்துக்கள் ஆசிகள் அவசியம்!
அன்புடன்
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

நன்றி தோழர் ஞானசேகரன் அவர்களே! உங்கள் பக்கத்துக்கும் பயணிக்கிறேன். நட்பை வளர்க்க விரும்புகிறேன்.
அன்புடன்
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

//காதிருப்பவர் அனைவருக்கும் ஓசை கேட்க்கும்.

கேட்க்கலாம் ஓசைகளை ...

நல்லாருக்கு//

அது உங்கள் காதுகளுக்குள் விசேடமாக ஒலிக்கும் நண்பரே நன்றி!

அன்புடன்
தோழர்(மச்சான்)
தணிகாஷ்

தமிழிசை சொன்னது…

Nalla kavithai nanbaraey...

அனுபவம் சொன்னது…

தமிழிசை கூறியது...
//Nalla kavithai nanbaraey...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே!