ஒன்றாக வந்த நட்பு
இரண்டாக ஆகும்போது
தவறான புரிதல் ஒன்று
தவறாக வந்து என்மேல்
வெகுவாக மனதை வாட்டி
விரைந்த அக்கதை நான் சொல்வேன்.
ஓர் நட்பு இன்னோர் நட்பை
என்னிடம் தந்தவேளை
வந்ததோர் புதிய நட்பு
கிண்டலாய் நாலு வார்த்தை
கிறுக்காக என்னைப்பேச
வந்ததோர் புதிய நட்பை
தந்ததே அந்த நட்பு
வசைபாட என்னை என்று
வாகாய் நான் குறைகள் கண்டு
கசையடி கொடுப்பதாக
கருத்தினில் எண்ணிக்கொண்டு
பேசாத பேசிக்கொண்டேன்
பெரு நட்பில் குறைகள் கண்டேன்.
கண்டதோர் குறையை -எந்தன்
மனதுக்குள் அடக்கிடாமல்
கனமாக நாலு வார்த்தை
முதல் நட்பைக் கடிய எண்ணி
கட்டி நீ விட்ட ஆள்தான்
கசையடி கொடுக்க என்று
சுற்றி நான் கதைகள் விட்டேன்
சூட்சுமமாக எண்ணி
எய்தவன் இருக்க அம்பை
நோபவன் நானன்று-அதனால்
ஏவிய நீயே எனக்கு
எதிரி என்றெண்ணிக்கொண்டேன்
கூவியே சத்தமிட்டேன்
குரைத்து நான் கடிக்கச் சென்றேன்.
இடிந்து நான் கடிந்தபோதும்
இப்படித்தான் நடந்ததென்று மத்திமமாகப் பேசி-என்
மனதையே தேற்றித் தன்பால்
குறையில்லை எனக் காட்டிற்று
உத்தமமான நட்பு!
பழகிய நட்பெனக்கு -தன்போல்
அழகிய நட்பைத் தரவே
வஞ்சக ஊடல் ஒன்று
வந்ததே கொடுமை கொடுமை!
ஓ..! ஊடல்தான் வந்ததாலே
உறுதியாயிற்றென் நட்பு!
வலை வாழ்வில் வந்த நட்பு
உயிருள்ள நட்போ என்றும்
சிலகாலம் சென்றபோது
சிதைந்திடும் நட்போ என்றும்
வசந்தகாலக் குயிலின் குரலாய்
வந்து போகும் நட்போ என்றும்
பலவேளை நினைந்த நட்பு
பலமான நட்பாய் ஆச்சே!
ஓ! இனியொரு விதி வந்தாலும்
நம் நட்பைப் பிரியாவண்ணம்
வாருங்கள் நண்பர்காள் நீர்
வரவில்லை என்றாற்கூட
தாருங்கள் கையை நீட்டி
இறுக்கமாய்ப் பற்றிக்கொள்வோம்!
இரண்டாக ஆகும்போது
தவறான புரிதல் ஒன்று
தவறாக வந்து என்மேல்
வெகுவாக மனதை வாட்டி
விரைந்த அக்கதை நான் சொல்வேன்.
ஓர் நட்பு இன்னோர் நட்பை
என்னிடம் தந்தவேளை
வந்ததோர் புதிய நட்பு
கிண்டலாய் நாலு வார்த்தை
கிறுக்காக என்னைப்பேச
வந்ததோர் புதிய நட்பை
தந்ததே அந்த நட்பு
வசைபாட என்னை என்று
வாகாய் நான் குறைகள் கண்டு
கசையடி கொடுப்பதாக
கருத்தினில் எண்ணிக்கொண்டு
பேசாத பேசிக்கொண்டேன்
பெரு நட்பில் குறைகள் கண்டேன்.
கண்டதோர் குறையை -எந்தன்
மனதுக்குள் அடக்கிடாமல்
கனமாக நாலு வார்த்தை
முதல் நட்பைக் கடிய எண்ணி
கட்டி நீ விட்ட ஆள்தான்
கசையடி கொடுக்க என்று
சுற்றி நான் கதைகள் விட்டேன்
சூட்சுமமாக எண்ணி
எய்தவன் இருக்க அம்பை
நோபவன் நானன்று-அதனால்
ஏவிய நீயே எனக்கு
எதிரி என்றெண்ணிக்கொண்டேன்
கூவியே சத்தமிட்டேன்
குரைத்து நான் கடிக்கச் சென்றேன்.
இடிந்து நான் கடிந்தபோதும்
இப்படித்தான் நடந்ததென்று மத்திமமாகப் பேசி-என்
மனதையே தேற்றித் தன்பால்
குறையில்லை எனக் காட்டிற்று
உத்தமமான நட்பு!
பழகிய நட்பெனக்கு -தன்போல்
அழகிய நட்பைத் தரவே
வஞ்சக ஊடல் ஒன்று
வந்ததே கொடுமை கொடுமை!
ஓ..! ஊடல்தான் வந்ததாலே
உறுதியாயிற்றென் நட்பு!
வலை வாழ்வில் வந்த நட்பு
உயிருள்ள நட்போ என்றும்
சிலகாலம் சென்றபோது
சிதைந்திடும் நட்போ என்றும்
வசந்தகாலக் குயிலின் குரலாய்
வந்து போகும் நட்போ என்றும்
பலவேளை நினைந்த நட்பு
பலமான நட்பாய் ஆச்சே!
ஓ! இனியொரு விதி வந்தாலும்
நம் நட்பைப் பிரியாவண்ணம்
வாருங்கள் நண்பர்காள் நீர்
வரவில்லை என்றாற்கூட
தாருங்கள் கையை நீட்டி
இறுக்கமாய்ப் பற்றிக்கொள்வோம்!
6 கருத்துகள்:
\\ஓ..! ஊடல்தான் வந்ததாலே
உறுதியாயிற்றென் நட்பு!\\
நல்ல விடயம்.
அதனால்தான் நட்பை நான் அதிகமாகப் புரிந்துகொண்டேன்.
//ஓ! இனியொரு விதி வந்தாலும்
நம் நட்பைப் பிரியாவண்ணம்
வாருங்கள் நண்பர்காள் நீர்
வரவில்லை என்றாற்கூட
தாருங்கள் கையை நீட்டி
இறுக்கமாய்ப் பற்றிக்கொள்வோம்//
நல்லா இருக்கு
நட்புடன்
ஆ.ஞானசேகரன்
நன்றி தோழர் ஞானசேகரன் அவர்களே! அடிக்கடி வாருங்கள்!
அன்புடன்
தணிகாஷ்
romba arumaiya irukunga...
தமிழிசை கூறியது...
//romba arumaiya irukunga...//
உங்கள் மனம் திறந்த கருத்துக்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றிங்க!
கருத்துரையிடுக