04 ஏப்ரல் 2009

ஜாக்கிரதை!

நண்பர்களே ஜாக்கிரதை!நீங்கள் ஒருவருடன் கொண்டுள்ள தொடர்பு எத்தகையதென்பது குறித்து தெளிவாய் இருங்கள்.அவர் நண்பரா அல்லது காதலரா என்று உங்களுக்கே தெரியாமலும், உங்கள் காதலரோ அல்லது நண்பரோ அவருடனான உங்கள் உறவு எத்தகையது என்பதை அவர்கூட புரிந்து கொள்ள‌முடியாத‌படியும் ந‌ட‌ந்துகொள்ளவும் வேண்டாம். அத்தகைய சூழ்நிலை பின்னர் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுடன் நட்போ காதலோ கொண்டுள்ள ஒருவரையும் மிகவும் பாதித்துவிடும். எனவே இது விசயத்தில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். சிலர் இதுவிடயத்தில் "நம்ப நட நம்பி நடவாதே" என்றவாறு தாங்க‌ள் கொண்டுள்ள நோக்க‌த்துக்கு மாறாக நடந்து கொள்கின்றனர். தாங்க‌ள் ஜாக்கிர‌தையாக‌ இருந்து கொள்ளும் அதேவேளை த‌ங்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்கள், தங்கள் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் ந‌ம்பிக்கொண்டிருக்கும்படி செய்து ஏமாறச் செய்து அவர்களின் வாழ்வில் மண்ணைத்தூவுகிறார்கள்.எனவே நண்பர்களே! இந்த இருதரப்பிலும் எதிலுமே உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். நீங்களும் கவனமாய் இருந்து மற்றவரையும் காப்பாற்றுங்கள்.

Free Signature Generator

கருத்துகள் இல்லை: