30 ஏப்ரல் 2009

என் இதயம்!


என் பேனைமுனைகளின்
கண்ணீரத்துளிகள்
உன் இதயத்தைக் கரைக்காதபோது
ஏன் கனவில் மட்டும்
நீ வந்து என்னை
நிட்டூரப் படுத்துகின்றாய்?

உன் பெயரை எழுதியே
காலியாய்ப்போன பேனைகள் எத்தனை
வேலிக்கப்பால் குப்பைமேட்டில்!

உனக்குத்தெரியுமா
உன் பெயரால் நிரம்பிய
என் தலையணையிற்கூட
சிறு இடமில்லை
ஒரு சிறு கவிதை எழுத
பின்
உன் நினைவுகளால்
நிரம்பிய என் இதயத்தில்
வேறொருத்திக்கு இடமேது?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காதலை ஈரப்படுத்தி கண்ணிர் காய்ந்து போக.....கொண்ட காதலும் வலியே கொள்ளாக் காதலும் வலியே....காதல் இல்லாத காலமே...வாழ்வின் கார்க்காலம்....மிக அருமை இந்த கவிதை.....

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

//காதலை ஈரப்படுத்தி கண்ணிர் காய்ந்து போக.....கொண்ட காதலும் வலியே கொள்ளாக் காதலும் வலியே....காதல் இல்லாத காலமே...வாழ்வின் கார்க்காலம்....மிக அருமை இந்த கவிதை.....//

காதல் இல்லாத காலமே...வாழ்வின் கார்க்காலம்....உங்கள் கற்பனை அபாரம் கருத்துக்கு நன்றி சகோதரி!

இய‌ற்கை சொன்னது…

nalla irukku kavithai

அனுபவம் சொன்னது…

மிக்க நன்றி இயற்கை!