13 மே 2009

அத்தைக்கே நன்றி சொல்வேன்!


அடி ஓடி நீ வாடி-என்
ரோஜாப்பு நீ வந்து முத்தங்கொடுடி
என் கண்ணாட்டி நீ வந்து கட்டிக்கொள்ளடி
சின்னப் பொண்ணாட்டம் நீ துள்ளிக் குதிக்கையிலே
என் ஆவி பறக்குதடி
(அடி ஓடி....)



சின்ன வாவா என்று உன்னையன்று அழைத்தேனே
தின்ன வாவா என்று என் உயிரைக் குடிக்கிறியே!
உன்ன பாவாடை தாவணியில் காண்கையிலே
பூவாடை என் நாசில் தவழுதடி-என்
மாமாட மாமி பெத்த மரிக்கொழுந்தே-உன்ன
மந்திரத்தால் புசை செய்து பாடட்டுமா?
(அடி ஓடி...)



மூக்குத்திதான் உன்னழகைக் கூட்டிடுதா- இல்ல
முழு நிலவு உன் அழகை விஞ்சிடுமா?-நெஞ்சில்
பூக்குத்தி நான் உன் பெயரைக் காட்டட்டுமா?- புள்ள
நீயன்றி என் மனதில் யாருமில்ல.
தாக்கத்தி போல் வளைந்த அந்த தடிப்பயல் பாக்கிறதா
தம்பி வந்து சொல்கையிலே தாங்குதில்ல என் மனசு
(அடி ஓடி...)




சாமி உன்னப் படைச்சிருக்கான் சத்தியமா எனக்கென்றுதான்
மாமி உன்னச் சுமந்திருக்கா மருமகன் எனக்கென்றுதான்
யாருக்கு நான் நன்றி சொல்ல யாரபுள்ள விட்டு வைக்க
வேரின்றி மரமுமில்ல மரமின்றி வேருமில்ல
ஆரயும் நான் விட்டு வையேன் அத்தைக்கே நன்றி சொல்வேன்!
(அடி ஓடி...)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அக்கால நாட்டுப்புறப்பாடல் அமைப்பில் வித்தியாசமா ஒரு முயற்சி...ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை....அத்தை பெண்ணை ஆராதித்து...அன்பை எல்லாம் அவள் மேல் மொழிந்து...அவள் அழகை வர்ணித்து அத்தைக்கு நன்றிச்சொல்லி....ரொம்பா நல்லா இருக்குப்பாடல்......

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
அக்கால நாட்டுப்புறப்பாடல் அமைப்பில் வித்தியாசமா ஒரு முயற்சி...ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை....அத்தை பெண்ணை ஆராதித்து...அன்பை எல்லாம் அவள் மேல் மொழிந்து...அவள் அழகை வர்ணித்து அத்தைக்கு நன்றிச்சொல்லி....ரொம்பா நல்லா இருக்குப்பாடல்...... கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி!அன்புடன் தணிகாsh.

sakthi சொன்னது…

அடி ஓடி நீ வாடி-என் ரோஜாப்பு நீ வந்து முத்தங்கொடுடிஎன் கண்ணாட்டி நீ வந்து கட்டிக்கொள்ளடிசின்னப் பொண்ணாட்டம் நீ துள்ளிக் குதிக்கையிலேஎன் ஆவி பறக்குதடி (அடி ஓடி....)

சினிமா பாட்டா வைக்கலாம்

அனுபவம் சொன்னது…

//sakthi கூறியது... அடி ஓடி நீ வாடி-என் ரோஜாப்பு நீ வந்து முத்தங்கொடுடிஎன் கண்ணாட்டி நீ வந்து கட்டிக்கொள்ளடிசின்னப் பொண்ணாட்டம் நீ துள்ளிக் குதிக்கையிலேஎன் ஆவி பறக்குதடி (அடி ஓடி....)

சினிமா பாட்டா வைக்கலாம்//

நன்றி sakthi! அப்படியே வைத்துக்கொள்ளலாம்.