09 ஜூன் 2009

மனிதன் தெய்வமாவது..


மதம் பிடித்த மனிதம் விரும்புவதில்லை
விலங்குகளுக்கு மதம் பிடிப்பதை
ஆனால் ,
மதம் கடந்தும் வாழும் மனிதம்!


மனிதம் ஒரேயடியாக மரணிக்கவில்லை
சில இடங்களில் மௌனித்தும்
சில இடங்களில் பலவீனப்பட்டும்
இன்றும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது


சிலர் கற்புக்கரசிகளைப் பட்டியலிடுவது போன்று
மனிதாபிமானிகளைப் பட்டியலிட்டால்
இந்தத் தெய்வங்களிரண்டும் முதன்மை பெறும்!


2 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்....

அனுபவம் சொன்னது…

நன்றி முனைவர் இரா.குணசீலன் அவர்களே!