16 ஜூன் 2009

இல்லாளாய் இரு பெண்ணே !
இல்லாளாய் இருக்கவென்று
இளமையிலே பலதும் கற்றாய்
நல்லியலாய் மெல்லியலாய் சொல்லியலாய்
இவையெல்லாம் உன்னிடத்தே
தொல்லியலாய் வந்த பண்பன்று
தோற்றுவித்தார் வையகத்தோர்
இல்லாளாய் இருப்பதற்கு
இவை வேண்டாம் உந்தனுக்கு
வல்லாளாய் இருப்பதென்றால்
வையகத்தில் வாழ்வதென்றால்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இவைகள் இல்லாளாய் இருந்து விடு!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வார்த்தைகள் போதவில்லை இதை வாழ்த்துவதற்கு எத்தனை சிறப்பாய் பெண்மையை கூறிவிட்டாய்..வாய்ப்பிளந்தேன் வார்தைகளற்று....அருமை அருமை அருமை.....

அனுபவம் சொன்னது…

மிக்க நன்றி தமிழரசி!