02 ஜூலை 2009

அத்தை மகன் முத்தமிட்டால்....

நீரருவி ஓடலாமா?
நீலவிழி காயலாமா?
அத்தை மகன் முத்தமிட்டால்
அகிலத்தையே அழைக்கலாமா?

என்னவோ ஏதோவென்று
எல்லோரும் ஓடிவாறார்
வாயை மூடு கண்மணியே
வார்த்தை பேசி வம்பு செய்வார்

உதட்டாலே முத்தமிட்டு -உன்
உயிரை அவன் குடித்தானோ?
பயத்தாலே அழுகிறியே -அவன்
பாசத்தினால் முத்தமிட்டான்

உதட்டீரம் எச்சிலென்று
ஒப்பாரி பண்ணுகின்றாய்
திகட்டாமல் இனிக்குமது
தேன்துளியாய் ஒருபோது


அத்தை மகன் உன் கணவன் -நான்
ஆக்கினைகள் பண்ணமாட்டேன்
கண்மூடி நீ துயிலு -உன்
மன்னவனை உபசரிப்பேன்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காதல் வழியும் கவிதை....

அனுபவம் சொன்னது…

நன்றி தமிழரசி!