04 ஜூலை 2009

சாமி நீயே வரங்கொடடி

என்ன எந்தன் கண்மணியே
ஏதும் இல்லை நிம்மதியே
வாழும் வழி ஏதுமுண்டோ
வார்த்தை ஒன்று சொல் கிளியே

சாதுவாக நானிருந்து
சாதித்தது எதுவுமில்லை
மாது உந்தன் துணையிருந்தால்
மன்னவனாய் நானிருப்பேன்

மாமிமகள் நீயெனக்கு
மந்திரியாய் வாய்த்துவிட்டால்
பூமியை நான் ஏய்த்திடுவேன்
புகழ் பலவும் சேர்த்திடுவேன்

கோயில் குளம் சென்றுகூட
சாமியை நான் கண்டதில்லை
பூமி போலப் பொறுத்திருக்கும்
பொறுமை எனக்கில்லையடி

தேவி நீதான் தெய்வம் என்று
தினந்தினம் நான் தேடிவந்தேன்
சாதிக்க வேணுமென்று
சாமி நீயே வரங்கொடடி


6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தணிகாஷ்..உங்கள் கவிதைகள் பாடல் நடையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது நாளுக்கு நாள் மெருகோடு...வாழ்த்துக்கள்...

Kandumany Veluppillai Rudra சொன்னது…

விண்ணப்பம் செய்தால் விரைவில் விடை கிடைக்கும்! நன்றாக இருக்கிறது .இன்னமும் முயற்சி செய்யுங்கள்

Muniappan Pakkangal சொன்னது…

Innum kalyaanam aahaliyaa ? Nalla varihal thambi.

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
//தணிகாஷ்..உங்கள் கவிதைகள் பாடல் நடையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது நாளுக்கு நாள் மெருகோடு...வாழ்த்துக்கள்...//

நன்றி தமிழரசி! தவறாமல் ஒவ்வொரு ஆக்கத்தையும் கண்ணோட்டம் செலுத்தும் உங்களுக்கு பல்லாயிரம்கோடி நன்றிகள்!
-அன்புடன்
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

உருத்திரா கூறியது...
//விண்ணப்பம் செய்தால் விரைவில் விடை கிடைக்கும்! நன்றாக இருக்கிறது .இன்னமும் முயற்சி செய்யுங்கள்//

நன்றி உருத்திரா அண்ணன் அவர்களே!
விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். உங்கள் ஊக்குவிப்புக்கள் இருப்பதால் கண்டிப்பாக முன்னேறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

-அன்புடன்
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

Muniappan Pakkangal கூறியது...
//Innum kalyaanam aahaliyaa ? Nalla varihal thambi//

நன்றி முனியப்பன் அண்ணா!
இல்லை இன்னும் இல்லை.
இனித்தான் விண்ணப்பிக்கும் உத்தேசம்.
ஹி...ஹி...ஹி.....!!!
-அன்புடன்
தணிகாஷ்