25 ஜூலை 2009

குறுந்தாவரம்!

சொந்த முயற்சியால்
உழைத்து வாழத்தான்
எனக்கும் விருப்பம்
ஆனால்
என்னைச் சிறைப்பிடித்த
மனிதக்காதலோ
என்னை எதற்கும் விடவில்லை

நான் மரணித்தால்
அதை ஜீரணிக்காது
நான் வாழ்வதைப்பார்த்தும்
அது வாழாவிருக்காது

அது முதலாளித்துவ முரட்டுச் சிந்தனைகள்
அத்தனையாலும்
என்னைக் கட்டிப்போட்டுள்ளது
அது தொழிலாழி வர்க்கத்தை
வாழவும் விடுவதில்லை
மாழவும் விடுவதில்லை
எது நடந்தாலும்
வீழ்ச்சி முதலாழிவர்க்கத்துக்கே என்பதால்

எனது விரல் நுனிகள் ஒவ்வொன்றும்
சீராக வெட்டப்படும்
சமகால இடைவெளியில்
அதே இடைவெளியில்
மருந்துமிட்டுக்கட்டப்படும்

2 கருத்துகள்:

sakthi சொன்னது…

எனது விரல் நுனிகள் ஒவ்வொன்றும்சீராக வெட்டப்படும்சமகால இடைவெளியில் அதே இடைவெளியில் மருந்துமிட்டுக்கட்டப்படும்

வலியுடன் கூடிய கவிதை

அனுபவம் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி sakthi!