03 செப்டம்பர் 2009

மெல்லச் சுவைக்கும் கல்லவள் இதழ்கள்


மெல்லிடை மெல்லெனக்
காற்றினில் ஆடுது
மெல்ல மெல்லச் சுவைக்கும்
கல்லென உன் இதழ்கள் இனிக்கும்

பூங்கொடி மேனியில்
பூத்த வெண் பூவெனப்
பல்வரிசை சிரிக்கும்
பொன் நகைகள் உதிர்க்கும்

உன் கண்களில் பிறந்திடும்
மொழியதன் அழகினில்
கவி வரிகள் பிறக்கும்
மனம் சுமைகள் மறக்கும்

பொன்மகள் கன்னத்தில்
சுருண்டிடும் கேசங்கள்
சிறு தூண்டில் வளைக்கும்
கயல் மீன்கள் பிடிக்கும்

சிற்றிடை தாங்கிய பட்டணி
உன் எழில் ஒளியினில் ஜொலிக்கும்
எனைக் கட்டிட வாவென
முட்டிய உன்னழகழைக்கும்


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காதலியின் அழகை கவியிட்ட விதம் அழகு...

வர்ணனையில் வசீகரிக்கப்படும் அந்த பொன்மகள் அழகு தெரிகிறது...
வாஞ்சை கொண்ட உன் மொழியால் அவள் வசப்பட்டுவிடுவாள்..

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

//காதலியின் அழகை கவியிட்ட விதம் அழகு...

வர்ணனையில் வசீகரிக்கப்படும் அந்த பொன்மகள் அழகு தெரிகிறது...
வாஞ்சை கொண்ட உன் மொழியால் அவள் வசப்பட்டுவிடுவாள்//

நன்றி தமிழரசி நன்றி!
உங்கள் எண்ணம்போல் நடந்தால் நல்லது.
நடக்குமா?

அன்புடன்
தணிகாஷ்

க.பாலாசி சொன்னது…

//உன் கண்களில் பிறந்திடும்
மொழியதன் அழகினில்
கவி வரிகள் பிறக்கும்
மனம் சுமைகள் மறக்கும்//

ஆகா...நல்ல அழகான வரிகள்...excellent....பாராட்ட வரிகள் இல்லை அன்பரே...அருமை...

அனுபவம் சொன்னது…

க.பாலாஜி கூறியது...
//உன் கண்களில் பிறந்திடும்
மொழியதன் அழகினில்
கவி வரிகள் பிறக்கும்
மனம் சுமைகள் மறக்கும்//

ஆகா...நல்ல அழகான வரிகள்...excellent....பாராட்ட வரிகள் இல்லை அன்பரே...அருமை...


மிக்க நன்றி நண்பர் பாலாஜி அவர்களே!
உங்கள் மனம் திறந்த விமர்சனங்கள்,கருத்துரைகளே என்னை ஊக்குவிக்கின்றன.
மீண்டும் நன்றிகள்!!!

அன்புடன்
தணிகாஷ்.