09 செப்டம்பர் 2009

உனது மொழி!


ஓ..! எந்தன் கனிமொழி!
உன் விழி கற்றதெங்கோ!
நீ மொழி கற்றதெங்கோ!
நீ பேசுவது மொழியா?
இல்லை
உன் மொழி பேசுவது விழியா?
ஏனோ உன் செவ்விதழ்கள்
மொழி பேச மறு(ற)க்க‌
தீட்டிய மைவிழிகள்
கவிதை சொல்ல வாய் திறக்கும்!
சில மொழிகளுக்கு ஒலி மட்டும் உண்டு
சில மொழிகளுக்கு ஒலி வரி இரண்டுமுண்டு!
ஆனால் இரண்டுமில்லா மொழியுமுண்டு
அதுதான் நீ பேசும் மௌனமொழி!

4 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

மொழி விளக்கம் தூள்

//உன் மொழி பேசுவது விழியா?//

எப்பிடி பேசுனாலும் பேசாட்டியும் காதல் காதல்தான்.....

பெயரில்லா சொன்னது…

காதலியின் மொழியை காதலின் மொழியாய் பல்வேறு கோணங்களில் அல்லவா மொழிந்து விட்டீர் கவிதைவாயிலாக...

மெளன மொழியை காதல் மொழி பெயர்த்துவிடுமே?

அனுபவம் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...

மொழி விளக்கம் தூள்

//உன் மொழி பேசுவது விழியா?//

எப்பிடி பேசுனாலும் பேசாட்டியும் காதல் காதல்தான்.....
நன்றி வசந்த்! உண்மைதான் காதல் காதல்தான்!

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

காதலியின் மொழியை காதலின் மொழியாய் பல்வேறு கோணங்களில் அல்லவா மொழிந்து விட்டீர் கவிதைவாயிலாக...

மெளன மொழியை காதல் மொழி பெயர்த்துவிடுமே?
நன்றி தமிழ்! நன்றி! நீங்களும் ரொம்ப கருத்து வைத்துத்தான் பேசுறீங்க?
அன்புடன்
தணிகாஷ்