27 செப்டம்பர் 2009

வாழ வழி விடுங்கள்!அரும்புகள் சருகாவதோ-இவர்
இரும்பாக உருவாவரோ-இல்லை
கரும்பாக உயிர் மாழ்வரோ?

வாழ்நாளே இருளாவதோ-இல்லை
வருங்காலம் ஒளியாகுமோ-இவர்
வருங்காலம் ஒளியாகுமுா?

நிகழ்காலம் வாழ்ந்தாக
எதிர்காலம் இரையாவதோ-இவர்
எதிர்காலம் இரையாவதோ?

துன்பக்கடலோடு விளையாடி
கரைமீது இவர் சேர்வரோ-இன்பக்
கரைமீது இவர் சேர்வரோ?

உலைமீது கரியாக
இவர் செய்த வினையேதம்மா?-இந்த
விதியென்னும் சதியேதம்மா?

உலகத்தின் புதுவேர்கள்
உலைமீது கரியானால்
நிலையாகப் புவி நிற்குமோ?-இங்கு
நிலையாகப் புவிநிற்குமோ?

விலைபேசி இவர் வாழ்வை
வீணாக்கும் கொடியோரே-உங்கள்
பிணங்கூடப் பணந்தின்னுமோ?-இல்லை
பணங்கூடப் பிணந்தாங்குமோ?

வாழப் பிறந்தோரே வழி விடுங்கள்-இவர்கூட
வாழ வழி விடுங்கள்-வலிக்கும்
இவர் பாதம் தடவிடுங்கள்!

6 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

சூப்பர்மா...

மனசார சொல்றேன்...

பெயரில்லா சொன்னது…

பிள்ளைகளின் வலியை பெற்றோர் மட்டும் உணர்ந்தால் போதாது மற்றவரும் உணரவேண்டும் அவர்கள் பிள்ளைகள் என்று....மனம் கொள்ளுங்கள் மனிதர்களே மனிதராகுங்கள்...

இய‌ற்கை சொன்னது…

;-( nalla sinthanai

அனுபவம் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...

சூப்பர்மா...

மனசார சொல்றேன்...

நன்றி வசந்த்!

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

பிள்ளைகளின் வலியை பெற்றோர் மட்டும் உணர்ந்தால் போதாது மற்றவரும் உணரவேண்டும் அவர்கள் பிள்ளைகள் என்று....மனம் கொள்ளுங்கள் மனிதர்களே மனிதராகுங்கள்...

உணரவேண்டும். உணர்வார்களா? நன்றி தமிழ்!

அனுபவம் சொன்னது…

இய‌ற்கை கூறியது...

;-( nalla sinthanai

நன்றி!நன்றி!!நன்றி!!!
அன்புடன் தணிகாஷ்