02 அக்டோபர் 2009

உழவன்!

பறந்திடும் புழுதியில்
மறைந்திடும் மனிதன்

யாரவனென்று பாருங்கள்!

பலர் வாழ்ந்திட உடல் நீர்

உரமாய்ச் சிந்தும்

உழவன் அவனே கடவுளடா!அவன் உடம்பினில் தெரியும்
நாளங்களெல்லாம்
உலகுக்கு உயிர்தரும் ரத்த அருவி

அரை வயிற்றுக்கு உணவு
அரையினில் துண்டு
ஆண்டவன் எளியவன் பாருங்கள்!


வரம்பினில் உண்டு
வயல்தனில் தூங்கும்
அவனே உலகின் அச்சாணி

அவன் நரம்புகள் சொல்லும்
வழ்க்கையின்கீதம் வாசித்துப் பாருங்கள்!காற்றினில் மழையினில்
கடும் வெயில் பனியினில்
வீட்டையும் மறந்து அவனுழைப்பான்
தூற்றிய பதருடன்
கனவுகள் கலையும்
துயரம் நீங்கள் அறிவீரோ?


மண்ணைப் பொன்னாய்
மாற்றிடும் மாற்றிடும் உளைப்பு
மந்திர வித்தை ஜாலமல்ல‌
பயிர்களினுள்ளே களையெடுக்க‌
அவன் உடற்களைகூட ஓடிவிடும்


ஏர் தொழும் அவனும் வாழ்வதற்கு
ஏது நீசெய்வாய் வழியதற்கு?
சுரண்டாதே நீ அவனுழைப்பை

சுகமாய் வாழ அவனை விடு!

அவனது கனவு குழந்தையின் வாழ்க்கை

அதற்கொரு வழியை நீ காட்டு!


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உழவை உழுது உழவனின் வலியை வேர்வையை நிலையை விதையாய் ஊன்றி உழுது இருக்கிறாய் தணிகாஷ்...

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

//உழவை உழுது உழவனின் வலியை வேர்வையை நிலையை விதையாய் ஊன்றி உழுது இருக்கிறாய் தணிகாஷ்...//
நன்றி தமிழ்!
என்னையும் உழவனாக்கிவிட்டீர்கள்???

அன்புடன் தணிகாஷ்