05 அக்டோபர் 2009

இதயமல்ல கருங்கல்!


தொடராய் ஓடும் நதியின் நீரால்
கல்லுங்கூடக் கரைந்திடுமாம்
கண்கள் சிந்தும் உவர் நீர்க்கடலில் -‍உன்
இதயம் ஏனடி கரையவில்லை?

காதல் என்னும் சுழல் நீர் உள்ளே
என்னைப் பிடித்துத் தள்ளி விட்டாய்
மீழத்துடிக்கும் எந்தன் தலையில்
நினைவுகள் கொண்டு தாக்குகின்றாய்

மழை மேகம் அழிந்தாற்கூட‌
வானவில் வர்ணம் மாறுவதில்லை
சிலையாய் எந்தன் நெஞ்சில் நிற்கும்
வஞ்சியுன் எண்ணம் மாறியதேனோ?

உனக்கும் இதயம் உண்டென்று
உண்மையில் நானும் நினைத்திருந்தேன்
கனக்குமென் மனச்சுமை அறியாத‍-கருங்
கல்தான் உனக்குள் இருக்கிறது

உன் இதயம் என்னும் கருங்கல்லை -என்
மனதில் சுமந்து வலி கொண்டேன்
எவரெஸ்ட் சிகரமென் றறிந்திருந்தால்
அதன்மேல் ஏறி அமர்ந்திருப்பேன்!

8 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

//உனக்கும் இதயம் உண்டென்று
உண்மையில் நானும் நினைத்திருந்தேன்
கனக்குமென் மனச்சுமை அறியாத‍-கருங்
கல்தான் உனக்குள் இருக்கிறது//

ரொம்ப அனுபவிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

கவிதை முழுதும் அருமை அன்பரே...

பெயரில்லா சொன்னது…

கரைப்பார் கரைத்தால் கரைந்திடும் இக்காதல் கருங்கல்.....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//மழை மேகம் அழிந்தாற்கூட‌
வானவில் வர்ணம் மாறுவதில்லை
சிலையாய் எந்தன் நெஞ்சில் நிற்கும்
வஞ்சியுன் எண்ணம் மாறியதேனோ?//


ரொம்ப நல்லா வரிகள் எனக்கு பிடிச்சது

அனுபவம் சொன்னது…

க.பாலாஜி கூறியது...

//உனக்கும் இதயம் உண்டென்று
உண்மையில் நானும் நினைத்திருந்தேன்
கனக்குமென் மனச்சுமை அறியாத‍-கருங்
கல்தான் உனக்குள் இருக்கிறது//

ரொம்ப அனுபவிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

கவிதை முழுதும் அருமை அன்பரே..

எல்லாம் கற்பனைதான் நண்பரே! கருத்துரைக்கு நன்றி!
அன்புடன்
தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...

கரைப்பார் கரைத்தால் கரைந்திடும் இக்காதல் கருங்கல்.....

எல்லாராலும் முடியுமா என்ன???
நன்றி தமிழ்!

அனுபவம் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...

//மழை மேகம் அழிந்தாற்கூட‌
வானவில் வர்ணம் மாறுவதில்லை
சிலையாய் எந்தன் நெஞ்சில் நிற்கும்
வஞ்சியுன் எண்ணம் மாறியதேனோ?//


ரொம்ப நல்லா வரிகள் எனக்கு பிடிச்சது.

நன்றி வசந்த்!
அன்புடன்
தணிகாஷ்

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

அழகு கவிதை! சுவை அபாரம்!!!!

அனுபவம் சொன்னது…

// நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் கூறியது...

அழகு கவிதை! சுவை அபாரம்!!!!//

கருத்துரைக்கு நன்றி நண்பர் சரவணகுமார் அவர்களே!