17 அக்டோபர் 2009

மாலையிட வாராயோ?


சோகமே முகவரியாய்-எந்தன்

வாழ்க்கையின் தலைவிதியோ?

மேகமே கலையாதோ -அந்த

வெண்ணிலவின் ஒளிபடவே

தேவி நீ இல்லாமல்-இந்தப்

பாவி நான் வாடுகிறேன்

தேன்துளி கசக்குதடி-எந்தன்

தேவி நீ இல்லாமல்

பூ மலர்ந்து மணம் தருமே-எந்தன்

பூமகள் கூந்தலெங்கே?

காதலுக்கு வேலியிட்டு

காவல் செய்யும் கொடுமையென்ன?

மான்விழி மலர்விழியாய்

நான்புகழ்ந்த விழிகளெங்கே?

உன்னைத்தினம் காணாமல்

தூங்குதில்லை என்விழிகள்

கன்னி உந்தன் நினைவுகளால்

கண்ணில் இந்த நீர்துளிகள்

மண்ணைவிட்டுப் பிரிந்தாலும்

உந்தன் நினைவுகள் மாறாது

கங்கையில் விழுந்திடவோ-எந்தன்

கண்மணியைத் தேடிடவோ

என்கையில் இருந்தகிளி

எங்கே போய் ஒழிந்ததடா?

மங்கை எந்தன் மலர்க்கொடியே

மாலையிட வாராயோ?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த கவிதைகளுக்கேனும் உன்னை காதலிக்க அவளுக்கு தோனாவிடில்...

ஏ பெண்ணே...இப்படி உன்னை நேசிக்க இனியாரால் இனி இயலும்?

அனுபவம் சொன்னது…

// தமிழரசி கூறியது...

இந்த கவிதைகளுக்கேனும் உன்னை காதலிக்க அவளுக்கு தோனாவிடில்...

ஏ பெண்ணே...இப்படி உன்னை நேசிக்க இனியாரால் இனி இயலும்?//


உண்மைதான்! பலர் முள்ளுக்கொப்பில் மாட்டியபின்னர்தான் யோசிக்கிறார்கள். அவளும் அப்படியென்றால் நானென்ன செய்ய?