13 அக்டோபர் 2009

விழி நீர் செலுத்த வந்து விடு!


கனவில் வந்த காதலியே!

காதலை என்னுள் வளர்த்தவளே!

மனதில்
நின்ற தேவதையே‍ - என்

மனதை நிறைத்துக் கொண்டவளே

கவிதை பாடப் பொருள் கொடுத்தாய் -என்

கற்பனையெல்லாம் பறித்தெடுத்தாய்

வாழ்க்கை
உனக்கு விளையாட்டா -என்

உயிரை அதில் நீ பணயம் வைக்க

எட்டிக்காயாய்
ஆனேனோ -நீ

எட்ட
நின்று பார்க்கின்றாய் -உன்

பார்வையில்
ஏனடி பனிமூட்டம் -நான்

பார்வையிலிருந்து மறைகின்றேன்

மட்டி
மடையன் நானல்லோ?-உன்

மனதைக்கூடப்
புரியாமல்

கட்டிக்கொள்ள
நினைத்தேனே‍ -என்

கற்பனையை
நான் என் சொல்ல?-உன்னை

அணைக்க முடியாமல்

சாவை
அணைத்துக் கொண்டேனால் -என்

கனவுகள்
உன்னைத்துரத்துமடி

நினைவுகள் உன்னை வருத்துமடி

கல்லறையில்
பூ மலர்வதனால் -என்

கனவுகள்
என்ன உயிர் பெறுமா?

மணவறையில்
என் கரம் பிடியா நீ -என்

பிணவறையில் ஏன் மரம் நடுவாய்?

உன்னை ஒருவன் அணைக்க முதல் -நான்

சாவை
அணைத்துக் கொள்கின்றேன்

விழிகள்
உனக்கு இருக்குமெனில் -நீ

விழி
நீர் செலுத்த வந்து விடு! -என்

நினைவுகள் உன்னுள் இருக்குமெனில்

நினைவஞ்சலியும்
செலுத்திவிடு!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காதல் போயின் சாதல் ஒன்றே வழியா?

அனுபவம் சொன்னது…

//தமிழரசி கூறியது...

காதல் போயின் சாதல் ஒன்றே வழியா?//

இதயம் ஒன்றை மட்டும் வைத்திருப்பவர்கள் பலர்? அதனால்தான் பலருக்கு இதே பிரச்சினை!