25 நவம்பர் 2010

உன்னை விட்டு...???


உற்றதுணை நீயிருக்க‌
ஊருக்கப்பால் நானிருக்க‌
தேன் வடியும் பூமுகமே‍ -நீ
வாடிவிழலாமோதான்?

ஜோடிக்கிளிபோல் நாம்
சேர்ந்திருந்து கதைபேச‌
ஓடிவரும் காலங் கண்ணே -நீ
வாடி வதங்காதே!

கொம்புமேல் அமர்ந்திருந்து
வம்புக்கதை பேசுகின்ற‌
ஜோடிக்கிளி கண்டெந்தன்
நாடி நரம்படங்குதடி!

கோடிபணம் வேண்டுமெந்தன்
கொம்பனையைக் கொள்வதற்கு, என்று
மாமன் சொன்ன கதையாலே‍ -நானும்
நாடு விட்டு இங்கு வந்தேன்

கோடி பணமிருந்தாலே -என்
கொம்பனையைச் சேரலாமோ?
பூவனையாள் வாடுமுன்னே
வண்டாய் வருவேன் நான்!

2 கருத்துகள்:

Ananthi சொன்னது…

வரிகள் நல்லா இருக்குங்க.. :-)

அனுபவம் சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி Ananthi!