05 டிசம்பர் 2010

பேய் மகன் நீயல்ல‌ பேயும் அவளல்ல...


பத்தினிப்பெண்ணவள் பார்வை பட்டால் -அந்த
அக்கினித்தீயும் அணையுமடா!
உத்தமி
தந்த புத்திரனே -அதை
உருக்கமாய்
நான் சொல்லக் கேளுமடா!

பெண்ணவள் உயிருள்ள பதுமையடா -அதில்
உணர்வுகள்கூட உள்ளதடா! -அப்
பதுமை
தந்த புதுமகனே -அந்த
உணர்வுகள்
உன்னிலும் உள்ளதன்றோ?

அன்புக்கு
ஏங்கிடும் பெண்மனமே- அது
துன்பம்
கண்டால் துவண்டிடுமே!
வெண்பட்டுப்போலும் அவள் மனமாம் -அதில்
கரும் புள்ளி எதனால் உருவாகும்?

பெண்ணவள் கொண்டாள் பலவடிவம்- நீ
கண்டது
ஒன்றே பேய்வடிவம்!
பேய்தான்
உனக்குத் தாய் என்றால் -அந்தப்
பெருமை
உனக்கே கேள் மகனே!

பெண்ணவள் ஏனோ வெறுக்கின்றாள்? -இந்த
ஆணின்
நடையால் ஒதுக்கின்றாள்.
"அவல்" என்று நீயும் இடிக்கின்றாய்
அதுகண்டு
"அவளு"ம் துடிக்கின்றாள்!

ஆண்மகன் என்று சொல்கின்றாய் -உன்
மனைமகள்
அவளை வெல்லாமல்
இன்னொரு பெண்ணைக் கொள்கின்றாய்
அதனால் அவளைக் கொல்கின்றாய்!

அன்னை அக்கா அண்ணியென்று
அனைவரும்
பெண்கள் அறியாயோ
கண்ணைக்
குத்திக் கெடுக்கின்ற
கயமை
ஒழித்து வாழ் மகனே!
இன்னும் சொல்ல வார்த்தை உண்டு
இன்னொருக்கால் நான் வருகின்றேன்!

2 கருத்துகள்:

உருத்திரா சொன்னது…

நன்றாக இருக்கிறது, தொடரட்டும் ,வாழ்த்துக்கள்.

அனுபவம் சொன்னது…

நன்றி அண்ணா!