19 மார்ச் 2011

கற்றிட எனக்கும் உதவுங்கள்!

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codesகாதல் ஊருக்கு வழி எதுவோ?- என்

கண்மணி பேசும் மொழி எதுவோ?


முகவரியில்லா ஊர் தேடி -நான்
முழுமதி தொலைத்த ஒரு பேடி!


காதலி அவள் ஒரு புத்தகமாய்- ஒரு
கவிஞன் சொன்னது ஞாபகமே!


வழியில் ஒரு நாள் கண்டெடுத்தால் -அந்த‌
மொழிதான் வேண்டும் படிப்பதற்கு!


வெகுமதி தருவேன் தோழர்களே அந்தக்
காதலின் காதலின் மொழியைக் கூறுங்கள்!


காதலை வென்ற கலைஞர்களே! -அந்தக்
காதல் வலித்தால் மருந்தென்ன?


ஒருதரம் முயன்றாற் கிடைத்திடுமா? -இல்லை
பலமுறை முயன்றால் வெற்றியுண்டோ?


புத்தகம் படித்திட ஆசை கொண்டேன்‍ -அந்தப்
புதுமொழி கற்றிட உதவுங்கள்!

கருத்துகள் இல்லை: