05 ஜூன் 2011

அல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes

01. ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.

02. மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி.

03. ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.

04. எப்படிப்பட்ட கொடிய தண்டனைகள் கிடைத்தாலும் உண்மையை மட்டுமே உரைக்கிற அற்புதமான பழக்கம் வரவேண்டும், அதுவே வாழ்க்கைக்கு அழகு.

05. குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பை கொல்லும் கொலைகாரரே.

06. ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கண்டிப்பும், தண்டனையும் எனக்கு கல்வியை தரவில்லை மாறாக தலைவலியைத்தான் தந்தது.

07. பிறருடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து மாண்புடையோராக வாழ்வதே கல்வி கற்றோருக்கு அழகுடைய செயலாகும்.

08. வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி.

09. கல்வி அறிவுள்ளவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தால் அவர்கள் கதைப்பதைக் கேட்டு வீட்டில் உள்ள குழந்தைகள் அறிவு பெறுவார்கள். யுதர்கள் சபாத் என்று கொண்டாடும் விருந்துக்கு அறிஞரை அழைத்து வருவார்கள் அதன் மூலம் விருந்தை அர்த்தப்படுத்துவார்கள்.

10. நாம் காட்டுக்கு வேட்டைக்குப் போகிறோம். அப்போது எந்த மிருகம் நமது கைக்கு அகப்படப் போகிறது என்று தெரியாது. ஆகவே அந்த மிருகத்திற்கு எக்ஸ் என்று பெயரிடுகிறோம். நாம் முயலை வேட்டையாடினால் அந்த முயலே எக்ஸ் என்பதன் கருத்தாகும்.

11. இராணுவ வீரர்கள் மனிதத்தன்மையற்ற பிறவிகள் மிருகத்தனமான இயந்திரங்கள்.

12. இராணுவம் என்பது மனிதனை மனிதனாக நடக்க விடாமல் மிருகமாக நடப்பதற்கு ஊக்குவிக்கும் தாபனமே.

2 கருத்துகள்:

vidivelli சொன்னது…

nalla pathivu nanpaa
valththukkal


can you come my said?

karthick kannan சொன்னது…

background ha la seriya padikka mudiyala pa