10 பிப்ரவரி 2009

உங்கள் ப்ளாக்கரில் தமிழ் ஒலிபெயர்ப்பு.

தமிழ் மொழியில் தட்டச்சு செய்யும்போதே ஆங்கில எழுத்துகளை தமிழ் மொழியில் மாற்றுங்கள்! பிளாகரில் உள்ள ஒலிபெயர்ப்பு முறைப்பற்றி மேலும் அறிக.
சிலர் ப்ளாக்கரில் தமிழில் இடுகைகளை இடுவதில் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். அனால் டாஷ்போர்ட்டிலே மொழித்தேர்வாக தமிழைத் தேர்வு செய்வதன்மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். உதாரணமாக, உங்கள் பெயரை thanikasalam என்று நீங்கள் எழுதினால் அது தணிகாசலம் என்று தானாகவே மாறிவிடும் .
ஒலிபெயர்ப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
ரோமன் எழுத்துகளை ஹிந்தி மொழியில் பயன்படுத்தப்படும் தேவநாகரி எழுத்துகளாக மாற்றுவதற்கான தானியங்கு ஒலிபெயர்ப்பு விருப்பத்தை பிளாகர் வழங்குகிறது. இதனால் ஹிந்தி சொற்களை ஒலியியல் முறையில் ஆங்கில எழுத்துகளைத் தட்டச்சு செய்வதன் மூலமாகவே சரியான எழுத்துகளில் பெற முடியும். இந்த அம்சத்தை இயக்க,

அமைப்புகள் அடிப்படைகள் பக்கத்துக்கு சென்று, ஒலிப்பெயர்ப்பு விருப்பத்தில் "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொகுத்தல் பயன்முறை அமைப்புகளைப் போலவே இந்த அமைப்பும் உங்கள் கணக்கின் அனைத்து வலைப்பதிவுகளையும் பாதிக்கும்.
இதுவரை அறியாதவர்களுக்காக தெரியப் படுத்துகிறேன். முயலுங்கள் கஷ்டம் ஒழிந்தது..

கருத்துகள் இல்லை: