14 பிப்ரவரி 2009

பெரும்பான்மையினரின் சட்டத்தின் பெயரால் நடந்த அநியாயங்கள்!

பெரும்பான்மையினர் சட்டம் என்ற பெயரால் இந்த உலகில் நிறைய அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்திருக்கின்றன. செனட்டர் ஜென் எ டிட் என்பவர் "பெரும்பான்மையினர் என்ற பெயரில் நடைபெற்ற அநியாயங்களைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார். "பெரும்பான்மையினர் ஜேசு கிறிஸ்துவை சிலுவையில் ஆணிகளால்பினைத்துக்கொன்றார்கள். கிறிஸ்தவ மதம் நம்பி வந்தவைகள் தவறானவைகள் என்ற உண்மையை சொன்னதற்காக பெரும்பான்மையினர் அறிஞர்கள் பலரை எரித்தே கொன்றிருக்கிறார்கள். "கொலம்பஸ் உலகம் உருண்டையானது" என்று சொல்லி கப்பலில் பிரயாணம் செய்து புதிய உலகத்தை கண்டு பிடித்தும்கூட பெரும்பான்மையினர் காற்றோட்டமில்லாத இருண்ட சிறையில் அவரை அடைத்தார்கள். பெரும்பான்மையினர் "அடிமைத்தனம் நியாயமானது" என்று சட்டம் இயற்றினார்கள். "பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்" என்று கூறியதற்காக பெரும்பான்மையினர் ஜான் பின் என்பவரின் காதுகளை அறுத்து எறிந்தார்கள். (நன்றி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் : பி எஸ் ஆர் ராவ் )
அது போன்றே இலங்கையில் எங்களுக்கு வாழ இடம் வேண்டும் என்று கேட்பதற்காக பெரும்பான்மையினர் தமிழர்களை பதைக்கப பதைக்கக் கொலை செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: