17 பிப்ரவரி 2009

சுடுகாடு அரவணைக்கும்!


ஒ..... !
எதைத்தான் சொல்வது?
ஓடும்போது என் கண்முன்னே
ஓர் அன்னை அவயவம் துண்டாக,
அப்பா ஒரு பக்கம் -அண்ணா
இன்னொரு பக்கம்
அம்மா அழுதுகொண்டே
அங்கே தடுக்கி விள
அக்கா என் கரம் பற்றி இழுத்தோட
அப்பப்பா முடியாமல் வீட்டில் தனித்திருக்க
அகதி என்ற பெயரில் நாம் இடுகாட்டில்
குடியேற்றம்!
இறக்க முன்னே இடுகாட்டில்
எங்களைப்போல் எத்தனை பேர் ???
பினமேடை மீதில் தவழ்ந்து விளையாடும் பிஞ்சுகள்!!
ஊரில் ,
பிணம் தின்னிப் பேய்கள்
குண்டு மழை பொழிந்து எம் உயிர் குடிக்கத் துரத்துகையில்
சுடுகாட்டுப் பேய் எம்மை வா என்று அரவணைக்கும்
அவை எமது மூதாதையர் ஆவிகள் அதனாலோ ?

கருத்துகள் இல்லை: