பாலை வனத்தில் நீயல்லோ
ரோசாச் செடியை நட்டவள்?
நீருற்றி தினமத்தை
நான் வளர்த்து வருகையில்
நட்டவள் நீ அதை
தளையில் கிள்ளி எறிவதோ?
பூந்தோட்டமாகவே
புலர்ந்திருந்த வாழ்வதை
பூகம்பமாய் வந்து ஓர்
புயற்காற்று அழித்ததே!
உன்னைத் தீண்டும் ஆசையால்
தீயைத் தீண்டிப் பார்க்கிறேன்.
நிஜம்தான் என் கண்மணி
நினைத்துப் பாரு
என்னை நீ!
5 கருத்துகள்:
அனுபவத்தோட அனுபவமா??? நன்றாக உள்ளது...
இல்லீங்க கற்பனை என்று எடுத்துக்கலாம்.
கல்லில் பனை(கற்பனை) முளைத்தாலும் நம்மிடத்தில் காதல் வராதுங்க.
சாதல் மலிந்த நாட்டவன் நான்.
நன்றி தமிழிசை.
நல்லாதான் இருக்கு
நினைத்து பார்த்தால்
கல்லில் பனை(கற்பனை) முளைத்தாலும் நம்மிடத்தில் காதல் வராதுங்க.\\
ஏன் ஏன் ஏன் ...
நமக்கு "காதல்" "சாதல்" "நோதல்" எல்லாம் ஒரே பொருள்தான் நண்பரே ஜமால்! பார்வைக்கு நன்றி தோழரே!
கருத்துரையிடுக