27 பிப்ரவரி 2009

கயலா? மையலா?

குளிர்ந்த நீர்ப் பொய்கையிலே குளிக்கச் சென்ற
கோதையவள் நிலாவதனம்
நீர்ப்பரப்பில் நிழலாக
கயலிரண்டாய்க் கண்ணிரண்டும் நீர்மேற்பாய
வான்பரப்பில் வட்டமிட்ட மீன்குருவி
நீர்ப்பரப்பில் நிழலதனைக்கொத்திவிட்டு
ஏமாந்து எழுந்தபோது-தான்
நீரில் வீழக் காரணமாம்
நிஜத்தைக்கண்ணெதிரே கண்டு
கொத்தக்கருதியேனோ சென்று பின்பு
கோதையவள் வதனத்தை முத்தமிட்டு
வான் பரப்பில் சென்றதங்கே
மர்மமென்ன?

2 கருத்துகள்:

Iyarkai சொன்னது…

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)

அனுபவம் சொன்னது…

நன்றி நண்பரே! முயற்சிக்கிறேன்.