11 மார்ச் 2009

சொல்லும் பொருளும்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் சொற்கள் பல அவை இன்று பயன்படுத்தப்படுகின்ற பொருளுக்குப் பொருத்தமற்றனவாகத் தோன்றுகின்றன.
இத்தகைய சொற்கள் எனது சிந்தனையைக் கிளறிக்கொண்டே இருப்பதால்.யாரிடமாவது சொல்லியழவேண்டுமென்று தோன்றுவதால் அவற்றில் ஒரு சொல்லை மட்டும் தருகிறேன் நீங்களும் சிந்தித்துச் சொல்லுங்கள்.

"விழிப்புணர்ச்சி" என்ற சொல்லை நன்றாகக் கவனித்துப்பாருங்கள்.
இச்சொல் ஆங்கிலச் சொற்களான Awareness,Awakening,Enlightenment போன்ற சொற்களுக்கு அண்மித்த அர்த்தத்தில் எம்மிடையே பயன்படுத்தப்படுகிறது. அது எந்தளவுக்குப் பொருத்தமானது? என்று சிந்தியுங்கள்!

உணர்ச்சியின் விழிப்பு நிலையைத்தான் நாம் விழிப்புணர்ச்சி எனக்கொள்கின்றோமாயின்,
உணர்ச்சி+ விழிப்பு> விழிப்புணர்ச்சி
எனக்கொள்ளல் எத்தனை விழுக்காடு பொபொருத்தமானது?

நிற்க,
"விழிப்புண‌ர்ச்சி" என்ற‌ சொல்லுக்கு பின்வ‌ரும் சேர்க்கைக‌ளில் எது பொருத்தமானது?

1.விழிப்பு+உண‌ர்ச்சி
2.விழி+ புண‌ர்ச்சி
என்னைப்பொறுத்த‌வ‌ரையில் இர‌ண்டாவ‌து சேர்க்கைதான் மிக‌வும் பொருத்த‌மான‌தாக‌த் தோன்றுகிற‌து.
ஆக, "அண்ண‌லும் நோக்க‌ அவ‌ளும் நோக்க..." என்னும்போது சொல்ல‌ப்ப‌டும் விழிக‌ளின்(கண்களின்) புண‌ர்ச்சியைக் கூற‌வே "விழிப்புண‌ர்ச்சி" என்ற‌ சொல் சால‌வும் பொருத்த‌ப்பாடுடைய‌தாக‌த் தோன்றுகிற‌து.
ஒரு வித தூண்டலினால் ம‌ன‌தில் ஏற்ப‌டும் துல‌ங்க‌லான‌ உண‌ர்ச்சியைக் கூற "விழிப்புண‌ர்ச்சி" என்ற‌ சொல்லைப் ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல் பொருத்த‌மான‌துதானா??? என்பது எனது வாதம்.
என்னுடைய‌து வாத‌மா? வித‌ண்டாவாத‌மா??
அறிஞர்க‌ளே! ந‌ண்ப‌ர்க‌ளே! சொல்லுங்க‌ள்!
இன்னும் நிறைய‌ குள‌ப்ப‌டிக‌ளை வைத்திருக்கின்றேன்.

4 கருத்துகள்:

psychoteller சொன்னது…

நண்பா,

தங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன,,, தொடரட்டும் உங்கள் பணி.

சுரேஷ் குமார்

அனுபவம் சொன்னது…

நன்றி! தோழர் சுரேஷ்குமார் அவர்களே!
நிறைகளையும் அதேவேளை குறைகளையும் சொல்லுங்கள்.திருத்திக்கொள்ள உதவும்.
உங்கள் தோழமையை நாடுகின்றேன்.
அன்புடன்
தணிகாஷ்

psychoteller சொன்னது…

நிச்சயம் தங்களோடு நட்புறவாட நானும் விரும்புகிறேன்.

அனுபவம் சொன்னது…

நன்றி நண்பா அரட்டை மூலம் சந்திப்போம்.
thanikash