29 மார்ச் 2009

மண்ணை நம்பி...

மண்ணை நம்பி வாழ்வோம் நாங்கள்
அன்னை இந்த பூமியடா
விண்ணைத்தொட்ட மனிதர்கூட‌
வாழ்ந்ததிந்த பூமியடா

( மண்ணை நம்பி....)

கண்ணால் காணும் சொர்க்கம் இதுதான்
கற்பனை எதுவும் தேவையில்லை
எண்ணம்போல் நீ உயர்ந்திடலாம்
திண்ணிய மனமே தேவையடா

(மண்ணை நம்பி......)

அண்ணன் தம்பி உங்களுக்குள்ளே
ஆயிரம் பேதம் இங்கிருந்தால்
சிறு எறும்பும்கூட உனை மிதிக்கும்
சிந்தனை செய்து வாழ்ந்திடடா

(மண்ணை நம்பி.......)

புத்தன் காந்தி மட்டுமில்லை சில
சித்தர்கள் கூட வாழ்ந்து சென்றார்
அத்தனை பெரும் இருந்திருந்தால் இந்த
அவனியில் உனக்கு இடமேது?
(மண்ணை நம்பி.........)

இந்த உண்மை கூட புரியாமல்
மண்ணை உனது சொந்தம் என்பாய்
கண்ணாம் உந்தன் உறவுகளை
காசிக்காக நீ அழிப்பாய்
( மண்ணை நம்பி.....)

மண்ணே உனது அன்னையடா
மகனே நீ ஒரு புனிதனடா
அண்ணே என்று அழைப்பான் உன்
அருமைத் தம்பி அழிப்பாயோ ?
(மண்ணை நம்பி......)

சொன்னேன் நம்பி வாழ்ந்திடடா
சொர்க்கம் இங்கு ஆக்கிடவா!
இன்னும் நீ அறியாவிட்டால்
என்னத்தை சொல்லி புரிய வைப்பேன் ?
(மண்ணை நம்பி........)

Free Signature Generator

Free Signature Generator

கருத்துகள் இல்லை: