02 ஏப்ரல் 2009

காலாவதியாகாத கனவுகள் கற்பனைகளோடு...

என்னை வென்றுவிட்ட

வெற்றிப் பெருமிதத்தில்

வேகமாய் சென்றுகொண்டிருக்கிறது

காலச் சக்கரத்தின்

இந்தக் கடைசிக் கண‌ங்கள் கூட

ஆனால்

என் கனவுகள் கற்பனைகளெல்லாம்

என்னிடத்தில் எஞ்சியிருக்கின்றன‌

அனைத்துமே வெறுமையாய்!

படைத்தல்

காத்தல்

அழித்தல்

அருளல்

மறைத்தல்
என்ற

கல்பகோடிக் காலங்களாகத்தொடர்ந்து வரும் தன் தொழிலில்

கடவுள்கூடக் கரைகாண முடியாதபோது

அவன் படைப்பில் வந்த

அற்ப ஜந்து என் கனவு.........???

கடவுள் சாகாததால்

காலச் சக்கரத்தின் நீட்சியில்

அவன் தொழிலும்

முடிவில்லாமற் தொடர்கிறது

அப்படித்தான் என் கனவுகளும் கற்பனைகளும்!

காலச் சக்கரத்தின் சுழற்சியால் காலாவதியாகா

நான் உயிரோடிருக்கும் வ‌ரை!


Free Signature Generator

கருத்துகள் இல்லை: