04 ஏப்ரல் 2009

சின்ன மனிதனுக்கு!

சின்ன மனதுடன் வாழும் மனிதா நீ
சிந்தனை செய்தாயோ?
உன்னை மனிதனென் றுலகிற்குச் சாற்றிடும்
உந்தன் செயல்களன்றோ?
இன்னல் வந்துற்றபின் என்ன விதியென்று
ஏங்குதல் முறையாமோ?
இன்னவகையென்று முன்னமதுகண்டு
முற்றிலும் அதை வெல்லும்
முறைமையறியாயோ?

சொன்ன வழியுண்டு முன்னர் பெரியோர்கள்
சோதனை செய்தாயோ?-இங்கு
சோதனை கண்டு நீ வேதனை கொண்டிடில்
சரித்திரம் படைப்பாயோ?
சோதனை வெல்லுதல் சாதனை அனைத்திற்கும்
உள்ள வழிமுறைதான்!
வேதனை கொண்ட நீ வெட்கப்பட வேண்டும்
விளங்கிக் கொண்டபின்னர்.

ஆறறிவுள்ள பேரறிவாளன் நீயென்று சாற்றுகின்றாய்
அகிலமனைத்துமவ் வாகாயமுங்கூட உனதென்றுரைப்பாய்
இத்தனை பெருமைகளுற்றவன் நீகூட
செத்தபின் எங்கு செல்வாய்?

சட்டமது கொண்டுன் மட்ட அறிவினைக்
கட்டிட்டுக் கொண்டவனே
கற்ற அறிவினில் காலமதை வெல்லும்
கலைகள் அறியாயோ?
வண்ண மலர்கூட வாழும் ஒரு நாளில்
வாசனை தருகிறதே
இன்ன பெரிய மனிதனுலகிற்கு
என்ன கொடுத்துச் செல்வாய்?
தின்ன ஒருபிடி தேடி வருவோர்க்குத்
தேவை எனக்குமென்பாய் -உள்ள
அனைத்தும் உரிமை எனச் சொல்லும்
உத்தமன் நீதானே?

சிற்றெறும்புக்குமுன் சிற்றுயிரேயுண்டு
சிந்தித்துப் பார்த்தாயோ?
ட்டவிழ்ந்த துன்பம் விட்டதிங்கேயிந்த
காலல்லனிதா -உந்தன்
மட்ட அறிவினால் வந்தவகையது
வாயைத்திறக்காதே

பலநூறூ வருடம் வையகத்தில் வாழ
வழிவகை கண்டாயோ?
ஒரு ஆறடி மண்ணே
சொந்தம் உனக்கென்றால்
ண்டைக்கு ருவாயோ?

என் வீட்டுக்கு ந்திடு
விளங்கிடநான் சொல்வேன்
நேரமில்லையிப்போ!


Free Signature Generator

Free Signature Generator

4 கருத்துகள்:

வியா (Viyaa) சொன்னது…

சிற்றெறும்புக்குமுன் சிற்றுயிரேயுண்டு
சிந்தித்துப் பார்த்தாயோ?
க‌ட்ட‌விழ்ந்த துன்பம் விட்டதிங்கேயிந்த
கால‌ம‌ல்ல‌ ம‌னிதா -உந்தன்
மட்ட அறிவினால் வந்தவகையது
வாயைத்திறக்காதே

alagana varigal..
kavithaiyil oru artham ullathu..

அனுபவம் சொன்னது…

நன்றி வியா!
குறைகளிருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்

அன்புடன்
தணிகாஷ்

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//சட்டமது கொண்டுன் மட்ட அறிவினைக்
கட்டிட்டுக் கொண்டவனே//

:}

அனுபவம் சொன்னது…

//சட்டமது கொண்டுன் மட்ட அறிவினைக்
கட்டிட்டுக் கொண்டவனே//


இந்த வரிகளுக்கு வெவ்வேறு விதமாக வியாக்கியானம் கொள்ளக்கூடியதாக இருக்கலாம் நண்பரே! உங்கள் கருத்தைச் சொல்லும் போதுதான். மற்றவர்கள்கூட தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லக்கூடியதாக இருக்கும்!
நான் இப்போதைக்கு எதுவுமே சொல்லவில்லை.
"ஆக்கம் எழுத்துருப் பெற்றதும் ஆக்கியவன் இறந்துவிடுகிறான்" என்கிறார்களே??? அர்த்தம் வாசகரிடத்திற்தான்