26 ஜூன் 2009

என்னை ஒன்றும் செய்யாதே!

சின்னப் பூனைக் குட்டி நான்

சிறுத்தைப் புலி அல்லவே

வேண்டாம் என்னை விட்டிடு

விபரீதங்கள் விளைந்திடும் !


தொட்டதில்லை ஆயுதம் நான்

சுட்டதில்லை யாரையும்

கெட்ட கெட்ட வார்த்தை பேசி

கேடும் விளைத்ததில்லையே !


கண்ணை மூடி மதுவருந்தும்

மானிடரின் செய்கையைக்

கண்டுதானே பாலைக் கூடக்

கண்ணை மூடி அருந்தினேன்


உந்தன் செய்கை செய்வதால்

என்னை மனிதன் என்பீரோ ???

என்னைப் போல ஒருவன் செய்தால்

என்னைக் கூட வைவீரோ ??


பூனை போலப் பதுங்கி ஒருவன்

புலி போலப் பாய்ந்திடில்

என்னை கூடப் புலியென்று

எண்ணிடுதல் நியாயமோ??


உனக்குக்கூட உதவிதான்

எந்தன் செய்கை மனிதனே!

எலிப் பிடிக்கப் பதுங்கினேன்

என்னை ஒன்றும் செய்யாதே!

6 கருத்துகள்:

மயாதி சொன்னது…

well...

அனுபவம் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
மயாதி!

Kandumany Veluppillai Rudra சொன்னது…

"மனிதர்களின் கொள்கையை அறிந்த பூனை :"

பெயரில்லா சொன்னது…

பூனைக் குட்டியை புலியாய் புணைந்த சிந்தனை அருமை அருமை..


பாடலாய் இருக்கிறது உன் கவிதைகள்
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

அனுபவம் சொன்னது…

உருத்திரா கூறியது...
//"மனிதர்களின் கொள்கையை அறிந்த பூனை :"//

மனிதர்கள் மிருகங்களை முன்னுதாரணமாகக் கொள்ளும்போது மிருகங்கள் இவ்வாறு செய்வதில் விந்தையில்லைத்தானே?
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உருத்திரா அவர்களே!

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
//பூனைக் குட்டியை புலியாய் புணைந்த சிந்தனை அருமை அருமை..


பாடலாய் இருக்கிறது உன் கவிதைகள்
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழரசி!