
சுந்தரத் தமிழில் எந்தன்
மந்திரக் கனிமொழியை
வந்தனை செய்தே -கவி
பாடு குயிலே !
...
பத்தரை மாற்றுத்தங்கம்
பவளவாய்ப் பசுங்கிளியை
முத்திரை பதித்த பின்னர் -என்
நித்திரை கலைந்ததடியே
...
சித்திரை கடந்த பின்னர்
வைகாசியில் திருமணம்
வாழத்தெமக்கு கூறுகின்றாய்
வரிக்குயிலே!
...
எத்தனை நீ பாடினாலும்
அத்தைமகள் நித்திரைக்கு
பங்கமேதும் செய்திடாதே
பாட்டுக்குயிலே!
...
நித்தமும் உன் பாட்டொலிக்கு
நிஜவடிவம் தரும் கொலுசை- என்
அத்தை மகள் அணிந்திருக்காள் -சத்தத்தில்
ஓடிடாதே காட்டுக்குயிலே!