Free Signature Generator
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
15 மார்ச் 2009
14 மார்ச் 2009
எனது சிந்தனை- 32
உன்னை ஏமாற்ற நினைப்பவனிடம் நீ ஏமாந்ததாகவே காட்டிக்கொள் ! அதனால் நீ அவனை ஏமாற்றுகிறாய் . அவன் உன்னைப் பற்றி எச்சரிக்கை அடைதல் குறைகிறது . 
Free Signature Generator
Free Signature Generator
09 மார்ச் 2009
எனது சிந்தனை-31
பேசப்படும் வார்த்தைகளைவிட பேசப்படாத வார்த்தைகள் பொருளாளமுடையவை!
08 மார்ச் 2009
எனது சிந்தனை-30
மகளிர் தினம் என்பது தினமும் அணுவணுவாக செத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு தொண்டைக்குள் நீரூற்றும் கடைசி முயற்சி.
07 மார்ச் 2009
எனது சிந்தனை-29
புனிதர்களைத் துரோகிகளாகவும் அதேநேரம் துரோகிகளைப் புனிதர்களாகவும் உருவாக்குவது சந்தர்ப்பம்தான்!
எனது சிந்தனை-28
திரிபிடகம், திருக்குர்ஆன், பைபிள், வேதநூல்கள் மீதான சமூகத்தின் பார்வை எப்போது மாறுகின்றதோ அப்போதே சமூகத்தைப் பீடித்துள்ள மதம் என்னும் நோய் குணமடையும்,சமூகம் உருப்பெறும்!
14 பிப்ரவரி 2009
எனது சிந்தனை-27
மனிதனை மனிதன் அடக்கியாளும் நடவடிக்கையின் வெளிப்பாடே அரசு!
எனது சிந்தனை-26

ஒரு மனிதன் இறந்துவிட்டான் என்பதற்காக அழுவதில் எந்தப் பிரயோசனமுமில்லை . அழுவதாக இருந்தால் குழந்தை பிறந்தவுடனே அழுங்கள். ஏனெனில் இறப்பதற்காக ஒரு குழந்தை பிறந்துவிட்டதே!
எனது சிந்தனை-25
செத்த பிணத்துக்காக சாகப்போகும் பிணங்கள் அழுகின்றன.
எனது சிந்தனை-24
நீ உயரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவரை தட்டிப் பதிக்காதே!
12 பிப்ரவரி 2009
எனது சிந்தனை-23
நீ பிறரை ஏமாற்றலாம் உன்னை ஒருபோதும் ஏமாற்றமுடியாது!
10 பிப்ரவரி 2009
எனது சித்தனை-22
"உலகம் ஒரு நாடகமேடை நாமெல்லாம் நடிகர்கள் " சிலருக்கு வழங்கப்பட்ட பாத்திரங்கள் சிறப்பானவை. பலருக்கு வழங்கப்பட்ட பாத்திரங்கள் பரிதாபகரமானவை. ஒவ்வொருவரும் தமது விடயத்தில் பங்காளிகளும் மற்றவர் விடயத்தில் பார்வையாளர்களுமே! தமது பாத்திரப்பங்கு சிறப்பாக அமைவதிலே ஒவ்வொருவரும் நாட்டம் செலுத்த வேண்டும்.
09 பிப்ரவரி 2009
எனது சிந்தனை- 21
எவரையும் எவருடனும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள் ஏனெனில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவனே மனிதனிடத்தில் ஒப்புமைகளைத் தேடுகின்றான். ஒப்புமை தேடும் நிலைமையானது ஒரு மனிதனிடத்தில் உள்ள தனித்துவத்தை இல்லாமல் செய்து அவனை இன்னொருவனைப்போல் (நீ ஒப்பிட்டுப்பேசுபவனைப்போல்) போலியாக நடிக்க கற்றுக்கொடுக்கின்றது. இதனால் தனிமனித ஆளுமைக்கும் சாவுமணி அடிக்கப்படுகின்றது இதன் காரணமாக ஒருவன் தனது சுய இருப்பை நிலை நிறுத்துவதை அலட்சியம் செய்வதோடு பிறரை காபி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்
எனது சிந்தனை-20
வாழ்க்கையில் ஏமாற்றங்கள் எதையுமே சந்திக்காமல் இருக்க ஒரே வழி எதிர்பார்ப்புக்கள் எதுவுமே இல்லாமலிருப்பதுதான்.
24 ஜனவரி 2009
எனது சிந்தனை-19
பூச்சியங்கள்கூட மதிப்புடையவைதான். ஆனால் குறைந்தபட்சம் பெறுமானமுள்ள ஒன்றுடனாவது சேர்ந்திருந்தால் மட்டுமே!
22 ஜனவரி 2009
எனது சிந்தனை-18
முட்டாள்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்களுக்குப் பஞ்சமேயில்லை.
21 ஜனவரி 2009
எனது சிந்தனை-17

மனம் ஒரு குப்பைத்தொட்டி.கண்ணும் காதும் மனம் என்னும் கிடங்கிற்குள் குப்பை கூழங்களை சேர்க்கும் இரு அழுக்குக் கான்கள்.வாய் அந்தக் குப்பை கூழங்களை சதா அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது ஏனைய அழுக்குக் கான்களை நிரப்புவதற்காக.
02 ஜனவரி 2009
எனது சிந்தனை-16
குற்றவாளியை, மனச்சாட்சியைவிட சட்டம் குறையவே தண்டிக்கிறது
13 மே 2008
எனது சிந்தனை-15
குற்றம் செய்தவன் குற்றத்தை உணர்ந்தபின் மன்னிக்காதவன் மனிதனேயல்ல!
27 ஏப்ரல் 2008
எனது சிந்தனை-14
விதி என்பது மனிதனே உருவாக்கிக்கொண்ட அவனது எதிரி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)