நெடுங்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடுங்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2009

நட்பின்மேல் வந்த ஊடல் நாசமாய்ப் போகட்டும்!

ஒன்றாக வந்த நட்பு
இரண்டாக ஆகும்போது
தவறான புரிதல் ஒன்று
தவறாக வந்து என்மேல்
வெகுவாக மனதை வாட்டி
விரைந்த அக்கதை நான் சொல்வேன்.

ஓர் நட்பு இன்னோர் நட்பை
என்னிடம் தந்தவேளை
வந்ததோர் புதிய நட்பு
கிண்டலாய் நாலு வார்த்தை
கிறுக்காக என்னைப்பேச‌
வந்ததோர் புதிய நட்பை
தந்ததே அந்த நட்பு
வசைபாட என்னை என்று
வாகாய் நான் குறைகள் கண்டு
கசையடி கொடுப்பதாக‌
க‌ருத்தினில் எண்ணிக்கொண்டு
பேசாத‌ பேசிக்கொண்டேன்
பெரு ந‌ட்பில் குறைக‌ள் க‌ண்டேன்.
க‌ண்ட‌தோர் குறையை ‍-எந்த‌ன்
ம‌ன‌துக்குள் அட‌க்கிடாம‌ல்
க‌ன‌மாக‌ நாலு வார்த்தை
முத‌ல் ந‌ட்பைக் க‌டிய‌ எண்ணி
க‌ட்டி நீ விட்ட‌ ஆள்தான்
க‌சைய‌டி கொடுக்க‌ என்று
சுற்றி நான் க‌தைக‌ள் விட்டேன்
சூட்சும‌மாக‌ எண்ணி

எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை
நோப‌வ‌ன் நான‌ன்று-அத‌னால்
ஏவிய‌ நீயே என‌க்கு
எதிரி என்றெண்ணிக்கொண்டேன்
கூவியே ச‌த்த‌மிட்டேன்
குரைத்து நான் க‌டிக்க‌ச் சென்றேன்.

இடிந்து நான் க‌டிந்த‌போதும்
இப்ப‌டித்தான் ந‌ட‌ந்த‌தென்று ம‌த்திம‌மாக‌ப் பேசி-என்
ம‌ன‌தையே தேற்றித் த‌ன்பால்
குறையில்லை என‌க் காட்டிற்று
உத்த‌ம‌மான‌ ந‌ட்பு!
ப‌ழ‌கிய‌ ந‌ட்பென‌க்கு -த‌ன்போல்
அழ‌கிய‌ ந‌ட்பைத் தர‌வே
வ‌ஞ்ச‌க‌ ஊட‌ல் ஒன்று
வ‌ந்த‌தே கொடுமை கொடுமை!
ஓ..! ஊட‌ல்தான் வ‌ந்த‌தாலே
உறுதியாயிற்றென் ந‌ட்பு!

வ‌லை வாழ்வில் வ‌ந்த‌ ந‌ட்பு
உயிருள்ள‌ ந‌ட்போ என்றும்
சில‌கால‌ம் சென்ற‌போது
சிதைந்திடும் ந‌ட்போ என்றும்
வ‌ச‌ந்த‌கால‌க் குயிலின் குர‌லாய்
வ‌ந்து போகும் ந‌ட்போ என்றும்
ப‌ல‌வேளை நினைந்த‌ ந‌ட்பு
ப‌ல‌மான‌ ந‌ட்பாய் ஆச்சே!

ஓ! இனியொரு விதி வ‌ந்தாலும்
ந‌ம் ந‌ட்பைப் பிரியாவ‌ண்ண‌ம்
வாருங்க‌ள் ந‌ண்ப‌ர்காள் நீர்
வ‌ர‌வில்லை என்றாற்கூட‌
தாருங்க‌ள் கையை நீட்டி
இறுக்க‌மாய்ப் ப‌ற்றிக்கொள்வோம்!


04 ஏப்ரல் 2009

சின்ன மனிதனுக்கு!

சின்ன மனதுடன் வாழும் மனிதா நீ
சிந்தனை செய்தாயோ?
உன்னை மனிதனென் றுலகிற்குச் சாற்றிடும்
உந்தன் செயல்களன்றோ?
இன்னல் வந்துற்றபின் என்ன விதியென்று
ஏங்குதல் முறையாமோ?
இன்னவகையென்று முன்னமதுகண்டு
முற்றிலும் அதை வெல்லும்
முறைமையறியாயோ?

சொன்ன வழியுண்டு முன்னர் பெரியோர்கள்
சோதனை செய்தாயோ?-இங்கு
சோதனை கண்டு நீ வேதனை கொண்டிடில்
சரித்திரம் படைப்பாயோ?
சோதனை வெல்லுதல் சாதனை அனைத்திற்கும்
உள்ள வழிமுறைதான்!
வேதனை கொண்ட நீ வெட்கப்பட வேண்டும்
விளங்கிக் கொண்டபின்னர்.

ஆறறிவுள்ள பேரறிவாளன் நீயென்று சாற்றுகின்றாய்
அகிலமனைத்துமவ் வாகாயமுங்கூட உனதென்றுரைப்பாய்
இத்தனை பெருமைகளுற்றவன் நீகூட
செத்தபின் எங்கு செல்வாய்?

சட்டமது கொண்டுன் மட்ட அறிவினைக்
கட்டிட்டுக் கொண்டவனே
கற்ற அறிவினில் காலமதை வெல்லும்
கலைகள் அறியாயோ?
வண்ண மலர்கூட வாழும் ஒரு நாளில்
வாசனை தருகிறதே
இன்ன பெரிய மனிதனுலகிற்கு
என்ன கொடுத்துச் செல்வாய்?
தின்ன ஒருபிடி தேடி வருவோர்க்குத்
தேவை எனக்குமென்பாய் -உள்ள
அனைத்தும் உரிமை எனச் சொல்லும்
உத்தமன் நீதானே?

சிற்றெறும்புக்குமுன் சிற்றுயிரேயுண்டு
சிந்தித்துப் பார்த்தாயோ?
ட்டவிழ்ந்த துன்பம் விட்டதிங்கேயிந்த
காலல்லனிதா -உந்தன்
மட்ட அறிவினால் வந்தவகையது
வாயைத்திறக்காதே

பலநூறூ வருடம் வையகத்தில் வாழ
வழிவகை கண்டாயோ?
ஒரு ஆறடி மண்ணே
சொந்தம் உனக்கென்றால்
ண்டைக்கு ருவாயோ?

என் வீட்டுக்கு ந்திடு
விளங்கிடநான் சொல்வேன்
நேரமில்லையிப்போ!


Free Signature Generator

Free Signature Generator

26 மார்ச் 2009

இதுதான் சகுனம்?


நடுச்சாமம் கடந்து
நாலுமணியடித்த பின்பு
கனவொன்று கண்டு
கண்விழித்த எந்தனுக்கு
பயத்தால் உடல் வியர்த்து
படபடென நடுங்கியது.

நடுக்கம் நீங்குமுன்பே
நானெழுந்து கனவதனை
ஒருக்கால் நினைத்துவிட்டு,
கண்ட கனவதனை
ஒருவருக்குச் சொன்னாக்கால்
அண்டாததன் பலனென்று
அன்றொரு நாள்
ஆச்சி சொன்ன
சூழ்ச்சி நினைவில் வர‌
பக்கத்திற் படுத்திருந்த‌
பங்கஜத்தைத் தட்டிவிட்டேன்
திடுக்கிட்டு அவளெழுந்து
திகிலோடு எனைப்பார்த்தாள்.
அப்போது
நடு மோட்டில் இருந்த பல்லி
நச்சென்று நாலு சத்தம் கத்தியதும்
உச்சத்துக்கேறியது எனது பயம்.

தொப்பென்று ஏதோவென்
தோழின்மேல் விழவே
பாம்பென்று பாய்ந்தாள்
பங்கஜம் அப்பால்
துள்ளி நான் எழுந்து நின்றேன்
பாம்பல்ல பல்லியது.

பல்லி விழுந்த பலனறிய‌
வல்லிபுரம் ஐயாவின்
வாசல் செல்ல மனம் நினைந்து
சொல்லிவிட்டென் மனைவியிடம்
சுறுக்காய் நான் வழி நடந்தேன்
கல்லொன்று தட்டியது‍‍ என்
கால் விரலில் நகமில்லை.

பயணத்திற் கால் தடக்க‌
வழி நடத்தல் கூடாதென்ற‌
அபசகுன விதியறிந்து
அத்தோடே வீடுவந்தேன்

மனைவந்து சேர்ந்த என்னை
மனைவியவள் விடவில்லை
மருத்துவமனை செல்லவென்றாள்
அவளோடு குழந்தையும் ஆர்ப்பரித்தான்.

மூவர் வழிசெல்லல்
முறையல்ல என்றவளும்
முத்துலிங்க அண்ணனையும்
முறைக்காய் அழைத்தெடுத்தாள்.
முச்சக்கர வண்டியதும்
முற்றத்தில் வந்ததுவே!

நெருக்கி நாங்கள் இருந்தாலும்,
முத்துலிங்க அண்ணனவர்
முதுகைத்திருப்பி என்பால்
முழ‌ங்காலை வெளியில் விட்டார்
முச்சக்கர வண்டியது
முச்சாண்தான் போயிருக்கும்
முடுக்கிற் திரும்புகையில்
முன்னே வந்தவண்டி -அவர்
முழங்காலில் மோதிடவே
குடைசாய்ந்த எங்கள் வண்டி
குட்டைக்குள் வீழ்ந்ததையோ!

ஓவென்று மனைவியழ‌
ஒருசத்தம் குழந்தைக்கில்லை
ஆ! என்றார் அண்ணனவர்
அவர் காலில் துண்டில்லை.
அதிவேகமாய் வந்த‌
ஆம்புலன்சு வண்டியிலே
அனைவரும் நாமேறி
ஆஸ்பத்திரி சென்றடைந்தோம்.

ஆளுக்கொரு விடுதியிலே
அனுமதிக்கப் பட்டோம் நாம்
கண்ட கனா பலித்ததென்று
கடவுளை நான் நொந்துகொண்டேன்.


Free Signature Generator

Free Signature Generator

22 மார்ச் 2009

கடவுளை நான் கண்டேன்!


கடவுளை கண்டேன்.
கையைப் பிடிதேன்
விடு விடு என்றான்
விசையாய் நடந்தான்

நானிட்ட அவியை
உண்ணும் உனக்கே
இத்தனை கிறுக்கா
என நான் நினைத்தேன்
வாய் பேசவில்லை

நாலடி நடந்தவன்
நடையைக்குறைத்தான்
திரும்பிப் பார்த்தவன்
திகைத்து நின்றான்

பாவியென் எண்ணம்
பரமன் அறிந்தனன்?
கறுவிய எனதுளம்
குறு குறு என்றது.

பாய்ந்து சென்றவன்
பாதம் பிடித்தேன்
பாவியென் பாவ‌ம்
தொலைத்திடு என்றேன்

யார் நீ என்றான்
தூர‌ நின்றான்
முகத்தைச்சுழித்தான்
முக்கண் திறந்தான்

என் தொழில் செய்தாய்
என்னையே இகழ்ந்தாய்
ஏனிங்கு வந்தாய்
என்னை நினைத்தாய்?

நானுன் பிள்ளை
நீயென் தந்தை
மறந்தோ போனீர்?
மகன் நான் என்றேன்

மறந்தவன் நானோ?
என்னை மறந்தாய்
என் தொழிலை மறந்தாய்
உன்னை மறந்தாய்
உன் செயலும் மறந்தாய்

என் பிள்ளை நீயென்றால்
எனையணுக ஏன் தயக்கம்?
உன் தந்தை எனை நெருங்க‌
கலர் வேட்டி,பூணூல்-கழுத்தில்
உருத்திராக்கமுடன்
ஏஜெண்டுத்துரை பலபேர்
இன்னும் பல தரகர்
என் பெய‌ரால் இவ‌ர் வாழ்வ‌ர்
என் பிள்ளை உன் உழைப்பில்

ப‌டைத்தாலும் ப‌டைத்தேன் நான்
ப‌ல‌ கோடி மானிட‌ரை
பொறுக்குதில்லை என் இத‌ய‌ம்
அத்த‌னையுமிங்கே கோயில் மாடாக‌..

நிதமும் நீ குடியிருக்க‌
குவலயத்தில் உந்தனுக்கு
கோயில் பல கட்டி
வாயில் அத்தனையும்
வாழைமரம் நட்டு
கும்பாபிடேகம்,குடமுழுக்கு அத்தனையும்
செய்யும் எமையெல்லாம்
கோயில் மாடென்றீர்
நன்று நன்று!

உன்னைப் படைத்தேன்
உயிர் பல படைத்தேன்
அறிவையும் கொடுத்தேன்
அனைத்தையும் கொடுத்தேன்

அறிவைக்கொண்டே
ஆயுதம் படைத்தாய்
அதனைக்கொண்டே
அனைத்தையும் அழித்தாய்.


க‌ண் நான் கொடுத்தேன்
க‌ண்ணில்லை என்றாய்
க‌ரையா இத‌ய‌ம் கொண்டாய்
என்னையே க‌ருங்க‌ல் என்றாய்.

பித்தனே நீ எனக்கு
அத்தனையும் கொடுத்தாய் -என்
அமைதியையும் நீ கெடுத்தாய்
ப‌த்த‌ன் நானுன‌க்கு
எத்த‌னையோ ப‌டைத்தேன்
எதுவும் நீ ஏற்க‌வில்லை
சித்த‌த்தை நீ கெடுத்தாய் என்
சிந்த‌னையும் நீ கெடுத்தாய்
மொத்த‌த்தில் என்னை நீ
ப‌டைத்திருக்க‌த்தேவையில்லை.


உண்மை நீ பகர்தல்
இத்தனையும் உன் அறிவால்
நேரும் என்றறிந்திருந்தால்
இப்புவியில் உன்னைப்
படைத்திருக்க மாட்டேன் நான்.

சொந்தம் எனக்கில்லை
சுகமும் எனக்கில்லை
சந்தம் எனக்கில்லை
சரித்திரமும் எனக்கில்லை
கந்தல் உடைகூடக்
கணக்கில்லா எந்தனுக்கு
பந்தம் தர நினைக்கும் உன்
பேரறிவை என் சொல்வேன்?


சுழலுகின்ற இப்புவியில்
சுதந்திரமாய் உமைப்படைத்தேன்
உழலுகின்றீர் துன்பத்தில்
ஊனமுடை உள்ளத்தால்
நான் கொடுத்த சுதந்திரத்தை
அழித்ததுங்கள் தந்திரம்தான்.

சத்தியமாம் ஓர் சொல்லை
சாதகமாய் உனக்காக்கி
புத்தியில்லா மூடரையுன்
புலமையால் நீ வெல்லுகின்றாய்
எத்தனையோ வழிவகையால்
இவ்வுலகை நீ கெடுத்தாய்
முத்தியும் நீ கேட்பாய் முகமன் பலகூறி

இடுகாட்டில் இருப்பவன் நான்
என்று சொல்லியென்னை
எள்ளிநகையாடுகின்றீர்
உம் வயிறே இடுகாடு
பிணம் புதைக்கும் சுடுகாடு.


ஐயா அனைத்துமுண்மை
பொய்யாம் இவ்வுலகை
மெய்யென்று நம்பியதால்
உய்யாமல் நான் கெட்டேன்
மெய்யே நீ சொன்னாய்
செய்ய‌ வ‌ழிய‌றியேன்
செய‌லும் நான் ஒன்ற‌றியேன்
உன்னோடே நான் வாறேன்.


எதற்கும் இவ்விடத்தில்
நிற்பாய் நீ சற்றே
என் பெண்டாட்டி பிள்ளையுடன்
வந்திடுவேன் இப்போதே.


சொல்வதைக்கேள் என்மகனே
படியளக்க நான் போறேன்.
இப்போது முடியாது
பின்னொருக்கால் அழைத்திடுவேன்
அப்போது நீ வருவாய்.


ஆண்டவனே ஐயா
என்னை விட்டு ஏகாதே
தெண்டனிட்டேன் உன்னடியில்
தெருவில் விட்டுப்போகாதே
என்று சொல்லிச்
சாட்டாங்கமாய் விழுந்தேன்
சங்கரன் அவனடியில்.
கண் விழித்தேன்
கல்லொன்றின் மேற்கிடந்தேன்.
உற்று உற்று நான் பார்த்தேன்
கல்லன்றி வேறில்லை.


Free Signature Generator

Free Signature Generator