பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 மார்ச் 2011

கற்றிட எனக்கும் உதவுங்கள்!

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes



காதல் ஊருக்கு வழி எதுவோ?- என்

கண்மணி பேசும் மொழி எதுவோ?


முகவரியில்லா ஊர் தேடி -நான்
முழுமதி தொலைத்த ஒரு பேடி!


காதலி அவள் ஒரு புத்தகமாய்- ஒரு
கவிஞன் சொன்னது ஞாபகமே!


வழியில் ஒரு நாள் கண்டெடுத்தால் -அந்த‌
மொழிதான் வேண்டும் படிப்பதற்கு!


வெகுமதி தருவேன் தோழர்களே அந்தக்
காதலின் காதலின் மொழியைக் கூறுங்கள்!


காதலை வென்ற கலைஞர்களே! -அந்தக்
காதல் வலித்தால் மருந்தென்ன?


ஒருதரம் முயன்றாற் கிடைத்திடுமா? -இல்லை
பலமுறை முயன்றால் வெற்றியுண்டோ?


புத்தகம் படித்திட ஆசை கொண்டேன்‍ -அந்தப்
புதுமொழி கற்றிட உதவுங்கள்!

25 நவம்பர் 2010

உன்னை விட்டு...???


உற்றதுணை நீயிருக்க‌
ஊருக்கப்பால் நானிருக்க‌
தேன் வடியும் பூமுகமே‍ -நீ
வாடிவிழலாமோதான்?

ஜோடிக்கிளிபோல் நாம்
சேர்ந்திருந்து கதைபேச‌
ஓடிவரும் காலங் கண்ணே -நீ
வாடி வதங்காதே!

கொம்புமேல் அமர்ந்திருந்து
வம்புக்கதை பேசுகின்ற‌
ஜோடிக்கிளி கண்டெந்தன்
நாடி நரம்படங்குதடி!

கோடிபணம் வேண்டுமெந்தன்
கொம்பனையைக் கொள்வதற்கு, என்று
மாமன் சொன்ன கதையாலே‍ -நானும்
நாடு விட்டு இங்கு வந்தேன்

கோடி பணமிருந்தாலே -என்
கொம்பனையைச் சேரலாமோ?
பூவனையாள் வாடுமுன்னே
வண்டாய் வருவேன் நான்!

04 ஜூலை 2009

சாமி நீயே வரங்கொடடி

என்ன எந்தன் கண்மணியே
ஏதும் இல்லை நிம்மதியே
வாழும் வழி ஏதுமுண்டோ
வார்த்தை ஒன்று சொல் கிளியே

சாதுவாக நானிருந்து
சாதித்தது எதுவுமில்லை
மாது உந்தன் துணையிருந்தால்
மன்னவனாய் நானிருப்பேன்

மாமிமகள் நீயெனக்கு
மந்திரியாய் வாய்த்துவிட்டால்
பூமியை நான் ஏய்த்திடுவேன்
புகழ் பலவும் சேர்த்திடுவேன்

கோயில் குளம் சென்றுகூட
சாமியை நான் கண்டதில்லை
பூமி போலப் பொறுத்திருக்கும்
பொறுமை எனக்கில்லையடி

தேவி நீதான் தெய்வம் என்று
தினந்தினம் நான் தேடிவந்தேன்
சாதிக்க வேணுமென்று
சாமி நீயே வரங்கொடடி


17 மே 2009

பாட்டுக்குயில்!





சுந்தரத் தமிழில் எந்தன்

மந்திரக் கனிமொழியை

வந்தனை செய்தே -கவி

பாடு குயிலே !

...

பத்தரை மாற்றுத்தங்கம்

பவளவாய்ப் பசுங்கிளியை

முத்திரை பதித்த பின்னர் -என்

நித்திரை கலைந்ததடியே

...

சித்திரை கடந்த பின்னர்

வைகாசியில் திருமணம்

வாழத்தெமக்கு கூறுகின்றாய்

வரிக்குயிலே!

...

எத்தனை நீ பாடினாலும்

அத்தைமகள் நித்திரைக்கு

பங்கமேதும் செய்திடாதே

பாட்டுக்குயிலே!

...

நித்தமும் உன் பாட்டொலிக்கு

நிஜவடிவம் தரும் கொலுசை- என்

அத்தை மகள் அணிந்திருக்காள் -சத்தத்தில்

ஓடிடாதே காட்டுக்குயிலே!











13 மே 2009

அத்தைக்கே நன்றி சொல்வேன்!


அடி ஓடி நீ வாடி-என்
ரோஜாப்பு நீ வந்து முத்தங்கொடுடி
என் கண்ணாட்டி நீ வந்து கட்டிக்கொள்ளடி
சின்னப் பொண்ணாட்டம் நீ துள்ளிக் குதிக்கையிலே
என் ஆவி பறக்குதடி
(அடி ஓடி....)



சின்ன வாவா என்று உன்னையன்று அழைத்தேனே
தின்ன வாவா என்று என் உயிரைக் குடிக்கிறியே!
உன்ன பாவாடை தாவணியில் காண்கையிலே
பூவாடை என் நாசில் தவழுதடி-என்
மாமாட மாமி பெத்த மரிக்கொழுந்தே-உன்ன
மந்திரத்தால் புசை செய்து பாடட்டுமா?
(அடி ஓடி...)



மூக்குத்திதான் உன்னழகைக் கூட்டிடுதா- இல்ல
முழு நிலவு உன் அழகை விஞ்சிடுமா?-நெஞ்சில்
பூக்குத்தி நான் உன் பெயரைக் காட்டட்டுமா?- புள்ள
நீயன்றி என் மனதில் யாருமில்ல.
தாக்கத்தி போல் வளைந்த அந்த தடிப்பயல் பாக்கிறதா
தம்பி வந்து சொல்கையிலே தாங்குதில்ல என் மனசு
(அடி ஓடி...)




சாமி உன்னப் படைச்சிருக்கான் சத்தியமா எனக்கென்றுதான்
மாமி உன்னச் சுமந்திருக்கா மருமகன் எனக்கென்றுதான்
யாருக்கு நான் நன்றி சொல்ல யாரபுள்ள விட்டு வைக்க
வேரின்றி மரமுமில்ல மரமின்றி வேருமில்ல
ஆரயும் நான் விட்டு வையேன் அத்தைக்கே நன்றி சொல்வேன்!
(அடி ஓடி...)

29 மார்ச் 2009

மண்ணை நம்பி...

மண்ணை நம்பி வாழ்வோம் நாங்கள்
அன்னை இந்த பூமியடா
விண்ணைத்தொட்ட மனிதர்கூட‌
வாழ்ந்ததிந்த பூமியடா

( மண்ணை நம்பி....)

கண்ணால் காணும் சொர்க்கம் இதுதான்
கற்பனை எதுவும் தேவையில்லை
எண்ணம்போல் நீ உயர்ந்திடலாம்
திண்ணிய மனமே தேவையடா

(மண்ணை நம்பி......)

அண்ணன் தம்பி உங்களுக்குள்ளே
ஆயிரம் பேதம் இங்கிருந்தால்
சிறு எறும்பும்கூட உனை மிதிக்கும்
சிந்தனை செய்து வாழ்ந்திடடா

(மண்ணை நம்பி.......)

புத்தன் காந்தி மட்டுமில்லை சில
சித்தர்கள் கூட வாழ்ந்து சென்றார்
அத்தனை பெரும் இருந்திருந்தால் இந்த
அவனியில் உனக்கு இடமேது?
(மண்ணை நம்பி.........)

இந்த உண்மை கூட புரியாமல்
மண்ணை உனது சொந்தம் என்பாய்
கண்ணாம் உந்தன் உறவுகளை
காசிக்காக நீ அழிப்பாய்
( மண்ணை நம்பி.....)

மண்ணே உனது அன்னையடா
மகனே நீ ஒரு புனிதனடா
அண்ணே என்று அழைப்பான் உன்
அருமைத் தம்பி அழிப்பாயோ ?
(மண்ணை நம்பி......)

சொன்னேன் நம்பி வாழ்ந்திடடா
சொர்க்கம் இங்கு ஆக்கிடவா!
இன்னும் நீ அறியாவிட்டால்
என்னத்தை சொல்லி புரிய வைப்பேன் ?
(மண்ணை நம்பி........)

Free Signature Generator

Free Signature Generator