காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜூலை 2011

ஆயுட் கைதி



இதயம் திருடிச் சென்றவள்
கனவில் வந்து செல்கிறாள்
திருடி அவளைப் பிடிக்க‍ ‍- நான்

தினமும் முயற்சி செய்கிறேன்

கையைப்பிடித்து இழுக்கிறாள்
கைது செய்து செல்கிறாள்!

கனவைக்கூடக் கலைத்தவள்

கவலை கொள்ளச்செய்கிறாள்


அவளின் சிறையில் கைதி-நான்
ஒருவன் மட்டும் இருப்பதால்
ஆயுட்கைதியாக-
நான்
அவளின் சிறையில் வாழுவேன்!

25 ஜூன் 2009

மலர் அல்லது மானம்

மொட்டொன்று அரும்பியது
மலரும் நாள் பார்த்திருந்தேன்
சட்டென்று ஒரு நாள் -என்
முகம் பார்த்து சிரிக்குமது
மட்டில்லா மகிழ்ச்சி கொள்ளும்
மணந்து நான் சுகம் பெறுவேன் .....

கட்டவிழ்ந்து ஓடிய என்
கற்பனைக்கு முடிவாக
சட்டென்று ஓர் காலை
சொட்டென்று தேன் வழிய
சுந்தரியாள் முகம் மலர்ந்தாள்

எட்ட மணம் வீசும் அத்தர் மணத்தழகி
அவளுக்கே அபாயமென்று
அவளறியாள் அவள் கவர்ச்சி
கண்பட்ட கன்னியரின்
கற்பதனை சூறை கொள்ளும் கயவனாம்
எங்கிருந்தோ வந்ததோர் கருவண்டு
பார்த்திருந்த என்னெதிரே
பலாத்காரமாய் முத்தமிட்டு -அவள்
கற்பதனை காவுகொண்டு கர்ச்சித்துப் பறந்ததடா!
மனமழிந்து முகம் கசங்கி-என்
மங்கையவள் தலை குனிந்தாள்
உள்ளமெலாம் நோக உணர்வெல்லாம் கெட்டழிய
ஒரு பொழுதே எந்தனுக்கு
யுகமொன்றாய் கழிந்தது காண்!

சிந்தனையே கனவாக நொந்தலைந்த மனத்தோடு
காலை விடிந்தவுடன்
கண்மணியாள் பக்கம் சென்றேன்!

கண்டதோர் காட்சியதால்
தலை சுற்றி நிலம் சாய்ந்தேன்!
மானமொன்றே பெரிதென்று-என்
மங்கையவள் கருதியதால்
வாழப்பிடிக்காமல் வையகத்தில் இருக்காமல்
அங்கங்கள் சிதற அவள்
அழித்திருந்தாள் வாழ்வதனை!