புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 அக்டோபர் 2009

கிழக்கில் அதிசயங்கள்!

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலினுள்ளிருந்து(கோயில் மூடிய நிலையில்) சில தினங்களில் குறிப்பிட்ட சில வேளைகளில் சிலம்போசை கேட்டதை பல இடங்களிலிருந்தும் மக்கள் சென்று கேட்டது அந்த அதிசயிக்கத்தக்க சம்பவங்களில் ஒன்றாகும்.

மற்றுமொரு சம்பவம் திருக்கோயிலை அடுத்துள்ள காஞ்சிரங்குடாவில் வறட்சி காரணமாக நிலம்வெடித்துள்ள மேட்டு நிலப்பகுதியில் நீர் ஊற்றெடுத்து வெளியேறியமையாகும்.பக்கத்திலுள்ள நிலம் வறட்சியினால் வெடித்துள்ள நிலையில் இது அதிசயம் என்றே மக்களால் கருதப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடியில் பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள பெரிய வேப்ப ம‌ரத்தின் கிளைகளிலிருந்து தேன் போன்று ஒரு திரவம் வடிந்து கொண்டிருப்பது மற்றுமொரு அதிசயமாகும்.இந்த திரவம் இனிமையாகவும் வேப்பம் பழத்தின் சுவையுடையதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அதிசயிக்க தக்க நிகழ்வாக கல்லடி பேச்சியம்மன் கோயிலிலுள்ள‌
தேற்றாமரத்தில் அம்மன் உருவத்தின் படிவினையும் மக்கள் தரிசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல கடவுள்களின் உருவமும் தெரிவதாகக் கூறும் மக்கள் சிலருக்கு தோன்றவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முன்னரான இடுகையில் நிந்தவூரில் வெளிப்பட்ட கடற்கன்னி பற்றியதகவல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22 அக்டோபர் 2009

அதிசயம்! ஆனால் உண்மை!

கடற்கன்னி உருவிலான மனித மேற்பாகமும் மீனின் வாற்பாகமும் இணைந்த தோற்றமொன்று 21. 10 .2009 அன்று நிந்தவூர்க் கடற்கரையில் சடலமாகக் கரையொதுங்கியது. வீடியோ படத்தைப் பாகம் பாகமாகப் படமெடுத்து இங்கு காண்பிக்கப் படுகிறது. ஒருசில மணி நேரத்துள் மக்கள் இதனை அடக்கம் செய்து விட்டனர்.





-நன்றி சகாதேவராசா

21 அக்டோபர் 2009

திரு(மதி)புகழ்


அத்தைக்கொருமகள் முத்தை நிகர் கிளி
தத்தத் தனவென நர்த்தனமிடுமயில்
எட்டாதொருமொழி கற்றுப் பயின்றவள் எழிலோத


மெட்டி யணிந்தவர் கடுக்கனணிந்தவர்
கட்டிக்கொளவென காதல் செயவென
சுற்றித்திரிந்தவர் பலபேர்கள்


வெட்டிப்பயலவன் கட்டிக்கொடுத்திடில்
குட்டிப்பெண் மகள் குறைகள் வருமடி
வேண்டாமவனெனச் சொன்னா ரென்மாமன்


அவழுக்கிணையிலை அழகிற் கலைமகள்
மெத்தப்பெருந்தொகை அழகுப்பொருள்கொள
கட்டாதென் தொழில் வருமானம்


பணத்திற் பிறந்தவள் குணத்திற் சிறந்தவள்
பத்துப்பவுணுடன் வேண்டும் ஒருகொடி
கட்டிக்கொள அவள் கழுத்திற்கொரு தாலி


அத்தைக் கென்றும் நானோ பெருமகன்
மகளுக்கென்றும் நானே மருமகன்
மட்டிப் பயலவன் தட்டிச் சென்றிட விடுவேனோ