
இதயம் திருடிச் சென்றவள்
கனவில் வந்து செல்கிறாள்
திருடி அவளைப் பிடிக்க - நான்
தினமும் முயற்சி செய்கிறேன்
கையைப்பிடித்து இழுக்கிறாள்
கைது செய்து செல்கிறாள்!
கனவைக்கூடக் கலைத்தவள்
கவலை கொள்ளச்செய்கிறாள்
அவளின் சிறையில் கைதி-நான்
ஒருவன் மட்டும் இருப்பதால்
ஆயுட்கைதியாக-நான்
அவளின் சிறையில் வாழுவேன்!
2 கருத்துகள்:
அழகாக காதலியை வரித்திருக்கிறீங்கள்..
நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
கருத்துரையிடுக